கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூரில் செயல்பட்டு வந்த உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி, மின் பகிர்மான வட்டம், போச்சம்பள்ளி கோட்டம், மத்தூர் உபகோட்டத்துக்கு உட்பட்ட, உதவி மின் பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) அலுவலகம், சந்தூர் கிராமத்தில், வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. வரும், 2021 ஜன., 2 முதல் இந்த அலுவலகம், காட்டாகரம் துணை மின்நிலைய வளாகத்தில், சொந்த கட்டடத்தில் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE