கிருஷ்ணகிரி: ''உயர்கல்வி படிப்பதில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது,'' என, ராஜ்யசபா எம்.பி., பேசினார்.
கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று நடந்தது. பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர், அமீர்பாஷா தலைமை வகித்தார். எட்டு பள்ளிகளை சேர்ந்த, 1,596 மாணவ, மாணவியருக்கு, 62 லட்சத்து, 70 ஆயிரத்து, 810 ரூபாய் மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டிகளை, ராஜ்யசபா எம்.பி., முனுசாமி வழங்கி பேசியதாவது: எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாணவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கினார். ஒருங்கிணைந்த மாவட்டத்தில், இரண்டு கல்லூரிகள் மட்டுமே இருந்தன. கடந்த, 10 ஆண்டுகளில், 25 புதிய கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உயர்கல்வி படிப்பதில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்தாண்டு, ஒன்பது அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க சேர்ந்த நிலையில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் தற்போது, 318 பேர் மருத்துவம் படிக்க உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், சி.இ.ஓ., பாலமுரளி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், முன்னாள் எம்.பி., அசோக்குமார் தலைமை ஆசிரியர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE