கிருஷ்ணகிரி: எண்ணேகொல்புதூரில் இருந்து பெரிய ஏரிக்கு, நீர் நிரப்பும் வாய்க்கால் திட்டத்தை, உடனே நிறைவேற்ற, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க வட்ட மாநாட்டில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க, வட்ட மாநாடு நடந்தது. குணசேகரன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு, மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி ஆகியோர் பேசினர். மாநாட்டில், மத்திய, மாநில அரசுகள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 100 நாள் வேலையை, 200 நாளாக மாற்றி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் விரிவுபடுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக, நாள் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த தொகையை, உடனடியாக வழங்க வேண்டும். வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும். 60 வயது முடிந்த அனைவருக்கும், முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். எண்ணேகொல்புதூரில் இருந்து, பெரிய ஏரிக்கு நீர் நிரப்பும் வாய்க்கால் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். பர்கூர் வட்டாரத்தில், இயங்கும் கிரானைட் குவாரி மற்றும் தொழிற்சாலைகளில், பர்கூர் வட்டத்தில் வசிப்பவர்களுக்கு, முன்னுரிமை வழங்கி, வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE