திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், புயல் பாதிப்பால், 13 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்ததாக, வேளாண் துறை சார்பில், அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், 'நிவர்' மற்றும் 'புரெவி' புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். இதில், நவ., 25ல், வீசிய, 'நிவர்' புயலால், 3,920 ஹெக்டேர் நெற்பயிர், 372 ஹெக்டேர் மணிலா, நான்கு ஹெக்டேரில் உளுந்து பயிர்களும் சேதமாகின.
அரசுக்கு அறிக்கை: தொடர்ந்து, டிச., 4ல், வீசிய, 'புரெவி' புயலால், 4,881 ஹெக்டேர் நெற்பயிர், 1,127 ஹெக்டேர் மணிலா, 425 ஹெக்டேர் உளுந்து, 2,298 ஹெக்டேர் கொள்ளு, இரண்டு ஹெக்டேர் துவரை, மற்றும், 19 ஹெக்டேரில் பருத்தி பயிர் சேதமடைந்துள்ளது என, வேளாண் துறை அதிகாரிகள், அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். மேலும், இதில், நெல் மணிலா போன்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 13 ஆயிரத்து, 500 ரூபாயும், மானாவரி பயிரான கொள்ளு பயிருக்கு மட்டும், ஹெக்டேர் ஒன்றுக்கு, 7,410 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என, வேளாண் துறை அறிவித்துள்ளது.
நிவாரண தொகை: அதன்படி, பாதிப்புக்குள்ளான பயிர் சேத அடிப்படையில், விவசாயிகளின் வங்கி கணக்கில், உரியதொகை, விரைவில் செலுத்தப்படும் என, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE