சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரஜினி பேனரை எரித்த ரசிகர்

Added : டிச 30, 2020
Share
Advertisement
திருச்சி: 'அரசியல் கட்சி துவங்கவில்லை' என்ற ரஜினி அறிவிப்பால் ஆத்திரமடைந்த ரசிகர் ஒருவர், திருச்சியில், ரஜினிகாந்த் பேனரை எரித்து, எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.நடிகர் ரஜினி, புதிய கட்சி துவங்கப் போவதாகவும், வரும் 31ம் தேதி, அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார். அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சியினரும் மிகுந்த எதிர்பார்ப்பில்

திருச்சி: 'அரசியல் கட்சி துவங்கவில்லை' என்ற ரஜினி அறிவிப்பால் ஆத்திரமடைந்த ரசிகர் ஒருவர், திருச்சியில், ரஜினிகாந்த் பேனரை எரித்து, எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.


நடிகர் ரஜினி, புதிய கட்சி துவங்கப் போவதாகவும், வரும் 31ம் தேதி, அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார். அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சியினரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில், நேற்று திடீரென, 'உடல்நிலை காரணமாக, அரசியல் கட்சி துவங்கவில்லை. அரசியலுக்கு வராமல், சேவை செய்வேன்' என்ற அறிவிப்பை ரஜினி வெளியிட்டார். இந்த அறிவிப்பால், அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அவரது ரசிகரான திருச்சி, சத்திரம் பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் பரமசிவம், 47, என்பவர், நேற்று மாலை, நந்தி கோவில் அருகே, ரஜினி பேனரை தீ வைத்து எரித்தார். 'இத்தனை காலம் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து காத்திருந்தோம். இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு, ஏமாற்றி விட்டார்' என திட்டியபடியே சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X