சம்பவம் செய்தி

தமிழ்நாடு

7 வயது சிறுமி பலாத்கார கொலை: காமுகனுக்கு 3 மரண தண்டனை

Added : டிச 30, 2020
Share
Advertisement
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, ஏம்பல் பகுதியைச் சேர்ந்த, 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வாலிபருக்கு, மூன்று மரண தண்டனை, ஒரு ஆயுள், இரண்டு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த, 7 வயது சிறுமி, ஜூன் 30ம் தேதி மாயமானார். ஏம்பல் போலீசார், சிறுமியை தேடிய நிலையில், ஜூலை 1ம் தேதி, அதே

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, ஏம்பல் பகுதியைச் சேர்ந்த, 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வாலிபருக்கு, மூன்று மரண தண்டனை, ஒரு ஆயுள், இரண்டு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த, 7 வயது சிறுமி, ஜூன் 30ம் தேதி மாயமானார். ஏம்பல் போலீசார், சிறுமியை தேடிய நிலையில், ஜூலை 1ம் தேதி, அதே பகுதியில் உள்ள வண்ணாங்குளத்தில், சடலமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில், ஏம்பல் பஸ் ஸ்டாண்டில் பூக்கடை வைத்திருக்கும் ராஜா, 25, என்பவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தது தெரிந்தது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும், 'போக்சோ' உள்ளிட்ட ஏழு பிரிவுகளில், ஏம்பல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில், புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்தார். ராஜாவுக்கு, மூன்று மரண தண்டனை, ஒரு ஆயுள், இரண்டு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்தார். சிறுமியின் பெற்றோருக்கு, அரசு சார்பில், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மரண தண்டனை தீர்ப்பு எழுதிய பேனாவை உடைத்தார். புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில், மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது, இதுவே முதல் முறை.

தீர்ப்பு விபரம் சிறுமி, பல வகையான பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை; 5 எம் பிரிவில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திருத்தப்பட்ட சட்டம், 2019ன் கீழ், மற்றொரு மரண தண்டனை. மேலும், 5 ஜே பிரிவில், பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் திருத்தப்பட்ட சட்டம் 2019ன் கீழ், மற்றொரு மரண தண்டனை வழங்கப்பட்டது. மேலும், பிரிவு 302ல் எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம், 1989ன் படி, ஆயுள் சிறை, பிரிவு 363ன் கீழ் ஏழு ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம், பிரிவு, 201ன் கீழ், மற்றொரு ஏழு ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம், இதை கட்ட தவறினால், தலா, இரு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குவிந்த நிவாரணம்: பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு, முதல்வர் நிவாரண நிதியில், 5 லட்சம் ரூபாய் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட நிதியில், 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது. தி.மு.க., சார்பில், 5 லட்சம் ரூபாய், நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில், 50 ஆயிரம், ராமநாதபுரம் எம்.பி., சார்பில், ஒரு லட்சம் ரூபாய், சிறுமியின் தந்தை நாகூரானிடம், ஜூலை மாதம் வழங்கப்பட்டது. சிறுமியின் குடும்பத்துக்கு, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அரசின் பசுமை வீடு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X