பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., இரண்டாக உடைய போகிறது: மக்கள்சபை கூட்டத்தில் ஸ்டாலின் ஆருடம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
ராணிப்பேட்டை: ''அ.தி.மு.க., இரண்டாக உடைய போகிறது,'' என, மக்கள் சபைக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.ராணிப்பேட்டை மாவட்டம், அனந்தலையில், தி.மு.க., சார்பில், மக்கள் சபை கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கிராம சபை என்றால், முதல்வர் பழனிசாமிக்கு கோபம் வருகிறது. இந்த ஆட்சியில் நடக்கும் ஊழல்களை சபையில் மக்கள் சொல்வதை, 'டிவி'யில்

ராணிப்பேட்டை: ''அ.தி.மு.க., இரண்டாக உடைய போகிறது,'' என, மக்கள் சபைக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.


ராணிப்பேட்டை மாவட்டம், அனந்தலையில், தி.மு.க., சார்பில், மக்கள் சபை கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கிராம சபை என்றால், முதல்வர் பழனிசாமிக்கு கோபம் வருகிறது. இந்த ஆட்சியில் நடக்கும் ஊழல்களை சபையில் மக்கள் சொல்வதை, 'டிவி'யில் அமைச்சர்கள் பார்க்கிறார்கள். இதனால், கிராம சபா கூட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டனர். பிரச்னை வேண்டாம் என, மக்கள் சபைக்கூட்டம் என, மாற்றி நடத்துகிறோம். கொரோனா காலத்தில், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு, 5,000 ரூபாய் வழங்க சொன்னேன். ஆனால், 1,000 ரூபாய் அறிவித்தனர். விரைவில், சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, இப்போது பொங்கலுக்கு, 2,500 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். அண்ணாதுரையின் மீது ஆணையாக, சத்தியமாக சொல்கிறேன், பொங்கல் பரிசு பணத்தை நான் தடுக்கவில்லை. உயர்த்தி கொடுங்கள் என்றுதான் கேட்கிறேன். அது அரசின் பணம். இதை வழங்க, திமு.க., தடையாக இருக்காது. அரசு பணத்தை, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் படங்களை வைத்து, கட்சி சார்பில் பணம் வழங்குவது போல, அ.தி.மு.க.,வினர் பல இடங்களில் டோக்கன் வழங்கி உள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 'பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுடா போக்கத்தான் பயலே' என, கிராமத்தில் சொல்வார்கள். முதல்வரே, பொய்யை பொருத்தமாக சொல்லி பழகுங்கள். இந்த மக்கள் சபை கூட்டத்தை, மேலும், 10 நாள் நீடிக்கிறோம். தமிழ்நாட்டில் அடுத்த முதலமைச்சர் யார் என, மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால், அ.தி.மு.க.,வில் முதல்வர் வேட்பாளர் யார் என, போர் நடக்கிறது. கூடி உட்கார்ந்து பேசி, முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என, அறிவித்துள்ளனர். ஆனால், இரண்டு நாட்களாக, முதல்வர் வேட்பாளரை, பா.ஜ., மோடி தான் முடிவு செய்ய வேண்டும் என, அமைச்சர்களே பேசி வருகின்றனர். எந்த நேரத்திலும், பன்னீர்செல்வம் கழன்று போகலாம். நிச்சயம், அ.தி.மு.க., இரண்டாக உடைய போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பரம்பரை சொத்தல்ல அ.தி.மு.க.,: திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில், காணொலி மூலம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம் திருவண்ணமலை. இதனால், 1989ல் திருவண்ணாமலையை தனி மாவட்டமாக, அப்போதைய முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். தி.மு.க.,வுக்கு துணை நின்றது தீபம். பழனிசாமியின் பரம்பரை சொத்து, அ.தி.மு.க., அல்ல என்பதை, தொண்டர்கள் உணர்ந்து விட்டனர். அ.தி.மு.க.,வுக்கு ஒரு பொதுச்செயலாளர் பதவி போடாதவர், லோக்சபா தேர்தலில் தோல்வி கண்டு, உள்ளாட்சி தேர்தலில், 60 சதவீதம் பதவிகளை இழந்து, மாநகராட்சி தேர்தல்களை நடத்தாத, அ.தி.மு.க.,வை மூன்றாவது முறையாக, வெற்றி பெற வைக்க போகிறாராம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X