புதுடில்லி: தற்போது தோன்றியுள்ள உருமாறிய கொரோனா வைரசை கூட தடுக்கும் ஆற்றல், தடுப்பூசி மருந்துக்கு உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை, அதிக வீரியமுள்ள கொரோனா வைரசின் புது வடிவம் அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து, பிரிட்டனில் இருந்து சமீபத்தில் இந்தியா வந்தவர்களிடம், புதிய கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தேசிய அறிவியல் முதன்மை ஆலோசகர், கே.விஜய் ராகவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பிரிட்டன், தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள புதிய உருமாறிய கொரோனா வைரஸ், தற்போதைய தடுப்பூசி மருந்துகளுக்கு கட்டுப்படாது என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

பெரும்பாலான தடுப்பூசிகள், புரதப் பொருள் வளர் சிதைவை இலக்காக வைத்து செயல்படுகின்றன. அதேசமயம், வைரஸ் தடுப்புக்கான, நம் உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை ஊக்குவிக்கவும் செய்கின்றன. எனவே, புதிய உருமாறிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த, தற்போதுள்ள தடுப்பூசி மருந்துகளே போதும். இவ்வாறு, அவர் பேசினார்.
இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், ஆண்கள், 63 சதவீதம்; பெண்கள், 37 சதவீதமாக உள்ளனர். உயிரிழப்பை பொறுத்தவரை, ஆண்கள், 70 சதவீதம்; 60 வயதுக்கு உட்பட்டோர், 45 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE