பொது செய்தி

இந்தியா

பிரிட்டன் விமான சேவை: ஜன.,7 வரை தடை நீட்டிப்பு

Updated : டிச 30, 2020 | Added : டிச 30, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: பிரிட்டன் - இந்தியா இடையிலான விமான சேவைக்கான தடை, ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமானங்கள், மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான, தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. எனினும்,
UK, Flights, TemporarySuspension, Extended, Jan7, பிரிட்டன், இந்தியா, விமானசேவை, தடை, நீட்டிப்பு,

புதுடில்லி: பிரிட்டன் - இந்தியா இடையிலான விமான சேவைக்கான தடை, ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமானங்கள், மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான, தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. எனினும், 'வந்தே பாரத்' திட்டம் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில், பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, பிரிட்டனில், புதிய மாற்றங்களுடன், கொரோனா வைரஸ் வேகமாக பரவத் துவங்கியது. இதையடுத்து, இந்தியா - பிரிட்டன் இடையிலான விமானங்கள், கடந்த, 23ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த விமான சேவைகளுக்கான தடை, நாளை (டிச.,31) வரை உள்ளது.

பிரிட்டனில், உருமாறிய புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவை , கடந்த, 23ம் தேதி முதல் நாளை வரை நிறுத்தி வைக்கப்பட்டன. பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மன், கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.


latest tamil news



இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது டுவிட்டர் பக்கத்தில், 'பிரிட்டனில் இருந்து விமான சேவை ஜன.,7ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பிரிட்டன் - இந்தியா இடையிலான விமான சேவைக்கான தடை, மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Tiruvallur,இந்தியா
30-டிச-202015:42:25 IST Report Abuse
R S BALA லண்டனிலிருந்து புதிய வகை புதிய கொரோனா வைரஸ் முற்றிலும் குறைந்த பின்னரே பிரிட்டன் விமான சேவை தொடங்க வேண்டும் .
Rate this:
Cancel
30-டிச-202013:31:34 IST Report Abuse
ஆப்பு இதை ரெண்டு நாள் முன்னாடியே சொல்லித் தொலைச்சிருக்கலாமே... போகவும் முடியாம, போகாமலும் முடியாம இப்போ சொல்லி கழுத்தறுக்கிறீங்களே ... பூரி...
Rate this:
Cancel
30-டிச-202013:31:40 IST Report Abuse
ஆப்பு போகவும் முடியாம, போகாமலும் முடியாம
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X