திருச்சி: அதிமுக ஆட்சியை கவிழ்க்க நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியை கவிழ்க்க நடந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதிமுக தற்போது வலிமையான கட்சியாக உருவெடுத்தது. அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது. உடைக்க நடந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. தற்போது அதிமுக.,விற்கும் குழப்பத்தை ஏற்படுத்த நடக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது.

கருணாநிதியின் மகன் என்ற ஒரே காரணத்தினால் ஸ்டாலின் திமுக தலைவராக ஆக்கப்பட்டார். நான் கடுமையாக உழைத்து படிப்படியாக முதல்வர் பதவி அடைந்தேன். பொய்யை கூட ஒழுங்காக சொல்ல ஸ்டாலினுக்கு தெரியவில்லை. பொய்யை சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டும் என்ற வார்த்தை ஸ்டாலினுக்கு தான் பொருந்தும்.

தேர்தலுக்காக வெளிமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் கூறுவதை கேட்டு திமுக செயல்படுகிறது. நாட்டில் நடப்பது ஸ்டாலினுக்கு தெரியவில்லை. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக தான். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE