கொரோனா குறித்த செய்தி பரப்பிய சீனப் பெண் பத்திரிகையாளருக்கு 4 ஆண்டு சிறை

Added : டிச 30, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் நோய்த் தொற்று வுஹானில் பரவியபோது தவறான செய்திகளை அளித்ததாகக்கூறி, பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு சீன நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், உலகையே உலுக்கி வருகிறது. கொரோனா பரவல் குறித்து சீன பெண் பத்திரிகையாளரான ஜாங் ஜான், 37, என்பவர் எஸ்.எம்.எஸ்., வீசாட், டுவிட்டர், யூடியூப்
Chinese, Journalist, ReportedCoronaVirus, Wuhan, சீனா, பெண் பத்திரிகையாளர், கொரோனா, வூஹான், சிறை

புதுடில்லி: கொரோனா வைரஸ் நோய்த் தொற்று வுஹானில் பரவியபோது தவறான செய்திகளை அளித்ததாகக்கூறி, பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு சீன நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், உலகையே உலுக்கி வருகிறது. கொரோனா பரவல் குறித்து சீன பெண் பத்திரிகையாளரான ஜாங் ஜான், 37, என்பவர் எஸ்.எம்.எஸ்., வீசாட், டுவிட்டர், யூடியூப் வாயிலாக செய்திகளை பரப்பியுள்ளார். கொரோனா குறித்த செய்திகளை கடந்த பிப்., மாதத்தில் சமூக வலைதளங்களில் நேரடி அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளாக பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்த கட்டுரையில், 'சீன அரசு, மக்களுக்கு போதுமான தகவல்களை வழங்கவில்லை, நகரத்தை பூட்டியது, ஒரு பெரிய மனித உரிமை மீறல்,' என எழுதியிருந்தார்.


latest tamil news


இந்நிலையில், கொரோனா தொடர்பான தகவலை வெளியிட்டதாக ஜாங் ஜான் உள்ளிட்ட 4 பத்திரிகையாளர்களை சீனா கைது செய்தது. இதன் விசாரணையை ஜாங்ஜான் முதலில் எதிர்கொண்டார். அப்போது, வெளிநாட்டு ஊடகங்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான செய்திகளை ஜாங் ஜான் பேட்டியாகக் கொடுத்ததாகவும், அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைத்தது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜாங்ஜான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு ஷாங்காய் புடாங் புதிய மாவட்ட மக்கள் நீதிமன்றம், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.தண்டனை அளிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் இருந்த ஜாங் ஜானின் தாய் கதறி அழுதுள்ளார்.

இதற்கிடையே, ஜாங் ஜான் ஆன்லைனில் 'தவறான கருத்துகளை' பரப்பியதாக நீதிமன்றம் கூறினாலும், அரசு தரப்பு அதன் ஆதாரங்களை நீதிமன்றத்தில் முழுமையாக வெளியிடவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என ஜாங் ஜானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
30-டிச-202017:37:05 IST Report Abuse
Indhuindian பத்திரிகை சுதந்திரம் பேச்சு சுதந்திரம் பேச்சுரிமையெல்லாம் இங்கே தானா எங்கப்பா நம்ம காம்ரேடுகள் கூப்பிடுங்க சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் கராட் , பிருந்தா காராட், நம்மவோர்ரு முத்தரசன், நல்லகண்ணு பலப்பல பலப்பல.
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - கழக பாசறை தொண்டன்,இந்தியா
30-டிச-202017:31:12 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு மக்கள் புரட்சி அங்கே உருவாகும்
Rate this:
Cancel
30-டிச-202016:07:16 IST Report Abuse
theruvasagan இங்கு சகிப்புத்தன்மை பத்திரிகை சுதந்திரம் இல்லை என்று பேசுகிறவனுக குறிப்பாக உண்டி குலுக்கிகள் இதுக்கு வாயே திறக்கமாட்டானுக.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
31-டிச-202006:07:44 IST Report Abuse
 Muruga Velஆன் லையன்லே பெமென்ட் பண்ணும் வசதி வந்த பிறகு உண்டி குலுக்கறதில்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X