விழுப்புரம் : விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில், இயக்குனர்கள் பெண் அதிகாரி மீது புகார்களை முன்வைத்து முறையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. தலைவர் தங்சேகர் தலைமை தாங்கினார். பொது மேலாளர் குமார் வரவேற்றார். இயக்குனர்கள் தனுசு, கலைசெல்வன், வக்கீல் செந்தில், பாஸ்கர், ராஜேஸ்வரி, தயாளுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் ஜெயராமன், உதவியாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில், இயக்குனர்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முறை நடந்த கூட்டம், இரு மாதங்களுக்கு ஒரு முறை நடத்துவதற்கான காரணம் கோரியும், கொரோனா கால தொழில் துவங்குவதற்கான சிறப்பு நிதி தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, தலைவர் தங்கசேகர், இந்த பிரச்னைகள் அனைத்தும், வங்கி மேலாண்மை இயக்குனர் நளினி என்பவரிடமே தேங்கியுள்ளது.இவர், நிர்வாக குழுவிற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். வழங்காத பட்சத்தில், இது சம்பந்தமாக, கூட்டுறவு இணை பதிவாளர் மற்றும் அமைச்சரிடம் புகார் மனு அளித்து, தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து, இயக்குனர்கள் அதே பிரச்னைகளை முன்வைத்து, வங்கி அதிகரிகளிடம் பதில் கூறும்படி விவாதம் செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த கூட்டத்தில், கூட்டுறவு நகர வங்கியில் வீட்டு கடன் 2 கோடி ரூபாய், தனிநபர் கடன் 1 கோடி ரூபாய், நகை கடன் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE