ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்

Updated : டிச 30, 2020 | Added : டிச 30, 2020 | கருத்துகள் (49)
Share
புதுக்கோட்டை: வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.புதுக்கோட்டையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன். சென்னை சென்றதும் அவரை சந்திப்பேன். ஆன்மிகத்தை ஏற்று கொள்ளுங்கள் என யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது. பகுத்தறிவை ஏற்று கொள்ளுமாறு நானும் யாரையும் நிர்பந்தம் செய்ய
ரஜினி, ரஜினிகாந்த், கமல், கமல்ஹாசன், தேர்தல், ஆதரவு, மக்கள்நீதிமையம்,rajini, rajinikanth,

புதுக்கோட்டை: வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன். சென்னை சென்றதும் அவரை சந்திப்பேன். ஆன்மிகத்தை ஏற்று கொள்ளுங்கள் என யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது. பகுத்தறிவை ஏற்று கொள்ளுமாறு நானும் யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது. ஆனால், ஆன்மிகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது. திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை. அனைவருக்கும் சொந்தம்.


latest tamil news




நேர்மையான அரசியலில் ஈடுபட்டேன் என்பது என் கல்லறையில் இருந்தால் போதும். விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமர் மோடி பாராமுகமாக இருப்பது சரியல்ல. விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X