ஆக்ஸ்போர்டு தடுப்பூசி: பிரிட்டன் அரசு ஒப்புதல்

Updated : டிச 30, 2020 | Added : டிச 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் பணியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கிவிட்டன. இந்த இரு நாடுகளும், பைசர் நிறுவனம் உருவாக்கிய
OxfordVaccine, UK, Approval, AstraZeneca, கொரோனா, தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ராஜெனெகா, பிரிட்டன், ஒப்புதல்

லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் பணியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கிவிட்டன. இந்த இரு நாடுகளும், பைசர் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து செயல்படுத்தியுள்ளன.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் 'அஸ்ட்ராஜெனெகா' நிறுவனம், தங்களது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பித்தன. இந்நிலையில், பிரிட்டன் அரசு இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.


latest tamil news


இது தொடர்பாக அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் தரப்பில் கூறுகையில், '4 மற்றும் 12 வாரங்கள் இடைவெளிக்குள் 2 டோஸ் மருந்துகள் செலுத்த வேண்டும். இந்த தடுப்பூசி, கொரோனா அறிகுறைகளை தடுப்பதில் பாதுகாப்பான மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. 2வது டோஸ் செலுத்தப்பட்டு 14 நாட்களுக்கு பிறகு யாருக்கும் பாதிப்பில்லை,' என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் 'அஸ்ட்ராஜெனெகா' நிறுவனம், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த, 'சீரம்' நிறுவனத்துடன் இணைந்து 'கோவிஷீல்டு' என்னும் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்தியாவிலும் இந்நிறுவனம் ஒப்புதலுக்காக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
30-டிச-202020:42:49 IST Report Abuse
Kalyan Singapore நமது அரசு விரைவிலேயே ஒப்புதல் அளிக்குமா? அல்லது மற்ற மருந்து கம்பனிகளின் முயற்சியால் தாமதம் செய்யுமா?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-டிச-202013:23:55 IST Report Abuse
தமிழவேல் நல்ல செய்தி. இப்போதைக்கு இந்த தடுப்பூசியே மிக மலிவு விலையில் விற்கப்படுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X