அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக.,வை அம்பலப்படுத்துவோம்: ஸ்டாலின்

Updated : டிச 30, 2020 | Added : டிச 30, 2020 | கருத்துகள் (65)
Share
Advertisement
சென்னை: ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க.,வை அம்பலப்படுத்துவோம் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்கு விசாரணைக்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பு ஆஜரானார்.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட
D.M.K, MKStalin, M.K.Stalin, Stalin, தி.மு.க, திமுக, மு.க.ஸ்டாலின், ஸ்டாலின், அதிமுக, அ.தி.மு.க., அவதூறு வழக்கு, நீதிமன்றம், தொல்லியல்துறை, முறைகேடு,

சென்னை: ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க.,வை அம்பலப்படுத்துவோம் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்கு விசாரணைக்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பு ஆஜரானார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அதிமுக அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜரானேன். உயர்நீதிமன்றம் பல வழக்குகளை ரத்து செய்து, முதல்வர் பழனிசாமி அரசுக்கு, அறிவுரை வழங்கியுள்ளது. ஆனாலும் வழக்குகள்! திமுகவை தடுக்கவும், மிரட்டவும் முடியாது. சட்டப்படி சந்திப்போம். ஒவ்வொரு கிராமத்திலும் அதிமுகவை அம்பலப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.




தமிழக மாணவர்கள் புறக்கணிப்பு


முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தொல்லியல் அலுவலர்களுக்கான தேர்வில் தமிழை முதன்மை பாடமாக கொண்டு பயின்றவர்களுக்கு வேலையில்லை என அதிமுக ஆட்சி மறுத்திருக்கிறது. தொல்லியல் அலுவலர் பதவிக்கான கல்வி தகுதி இருந்தும் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை நிராகரித்து, அருந்ததியர் சமுதாய மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது. பிற மாநில மாணவர்களை கவுன்சிலிங்கிற்கு அழைத்து தமிழக அரசின் தொல்லியல் துறையில் பயின்ற மாணவ மாணவியரை நிராகரித்தது ஏன்? தமிழகத்தில் படிப்போருக்கு வேலை கொடுக்க மறுப்பது ஏன்? தேர்வில் நிராகரிக்கப்பட்ட பெரும்பாலான மாணவ மாணவியர்கள் தமிழ் துறையினை சேர்ந்தவர்கள்.


latest tamil news



தமிழக கல்வெட்டுகள் தமிழில்தான் உள்ளது. அப்படியிருக்கையில், தமிழ் படித்த மாணவ மாணவியருக்கு முன்னுரிமை கொடுக்காதது ஏன்? குளறுபடிகளுக்கு தீர்வு கண்டு, தமிழக அரசின் தொல்லியல் துறையில் பயின்ற தமிழக மாணவ மாணவியர்க்கு வேலைவாய்ப்பு வழங்க கவுன்சிலிங்கிற்கு அழைக்க வேண்டும். கருணாநிதி அளித்த முன்னுரிமை இட ஒதுக்கீட்டின் பயன் தமிழக மாணவ மாணவியர்க்கு செல்ல முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.




முறைகேடுகளில் முதலிடம்



ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவு ஒன்றில், மக்களுக்கு கொரோனா பாதுகாப்புகவசம் வழங்குவதாக கூறி, டெண்டர் முறைகேடு செய்த முதல்வர் பழனிசாமி அரசு, அவற்றை தயாரித்தவர்களுக்கு பணம் கொடுக்காத கொடுமையும் அம்பலம்! 5 கோடி முகக்கவசங்களுடன் தயாரித்த பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையும் தேங்கி கிடக்கிறது. முறைகேடுகளில் தான் முதலிடம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
31-டிச-202010:43:30 IST Report Abuse
Anand அதிமுகாவை மேலும் மேலும் பலப்படுத்தத்தான் இந்த தத்தி அலையுது..
Rate this:
Cancel
Muthiah.G - Tamil Nadu,இந்தியா
31-டிச-202008:12:24 IST Report Abuse
Muthiah.G அரசியல் வாதிகளுக்கு, நீதிபதிகள் பயப்படுவது ஏன்? தின சந்தைபோல் கூட்டம் வருவது ஏன்? நீதிமன்றம், அரசியல் மன்றமாக மாறுகிறதா? பாமற மக்கள் நீதிமன்றம் வந்தால் மிரட்டி விறட்டுவதும், கூட்டமாக அரசியல் வாதிகள் வந்தால் நீதிபதிகள் அமைதிகாப்பதும் ஏன்? வக்கீல்கள் உள்பட வழக்கில் இரு தரப்பினறுக்கும் நீதிமன்றத்தின் அருகில் எத்தனை பேர் அனுமதி,நீதிமன்றதிற்குள் எத்தனை பேர் அனுமதி. நீதிபதிகளின் பதில் என்ன?.
Rate this:
Cancel
Muthiah.G - Tamil Nadu,இந்தியா
31-டிச-202007:51:59 IST Report Abuse
Muthiah.G வக்கீல்கள் உள்பட வழக்கில் இரு தரப்பினறுக்கும் நீதிமன்த்தின் அருகில் எத்தனை பேர் அனுமதி, நீதிமன்றதிற்குள் எத்தனை பேர் வக்கீல்கள் உள்பட வழக்கில் இரு தரப்பினறுக்கும் நீதிமன்த்தின் அருகில் எத்தனை பேர் அனுமதி,நீதிமன்றதிற்குள் எத்தனை பேர் அனுமதி. அரசியல் வாதிகளுக்கு, நீதிபதிகள் பயப்படுவது ஏன்?ர் அனுமதி. அரசியல் வாதிகளுக்கு நீதிபதிகள் பயப்படுவது ஏன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X