புதுடில்லி: கொரோனாவுக்கு எதிராக உருவாக்கிய ‛கோவிஷீல்டு' தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற சீரம் நிறுவனத்தின் விண்ணப்பம் குறித்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்தின் நிபுணர் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. தங்களின் ‛கோவிஷீல்டு' என்ற தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கக்கோரி, புனேவில் உள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு விண்ணப்பித்துள்ளது.

இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் விண்ணப்பம் குறித்து நிபுணர் குழுவினர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்றைய கூட்டத்தில் சீரம் நிறுவனத்தின் விண்ணப்பம் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில், எடுக்கப்படும் முடிவுகள், இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
சீரம் நிறுவனம் உருவாக்கிய ‛கோவிஷீல்டு' தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்த நிலையில், இந்தியாவும் இன்று ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE