காத்மாண்டு: நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்ய சீன அதிபர் ஜி ஜிங் நியமித்த குழு நான்கு நாள் முகாமிட்டிருந்தது. ஆனால் அவர்களால் கட்சியினரை சமாதானப்படுத்த முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
![]()
|
நேபாளத்தில் 2018ல் சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் பிரசந்தாவின் நேபாள மாவோயிஸ்ட் மைய கம்யூனிஸ்ட் கட்சி இணைக்கப்பட்டது. இதற்கு சீன அமைச்சர் குவோ யெஸோ என்பவர் காரணமாக இருந்தார். தற்போது பிரதமர் ஒலி மற்றும் கட்சியின் துணை தலைவர் பிரசந்தா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் ஒலிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பிரசந்தா முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் பிரதமர் ஒலி.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இந்நிலையில் சீன அதிபர் நியமித்த குழு இரு தரப்பினரிடையே பிணைப்பை ஏற்படுத்த சில நாட்களுக்கு முன் நேபாளம் வந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைச்சர் குவோ யெஸோ சீன குழுவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் அதிபர் சர்மா ஒலி, அவருக்கு எதிரணியில் இருக்கும் பிரசந்தா மற்றும் மாதவ் நேபாள், அதிபர் ஆகியோரை சந்தித்தனர்.
![]()
|
பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற பரிந்துரையை திரும்ப பெறுமாறு ஒலியிடம் வலியுறுத்தினர். அவரை பிரதமராக தொடராக பிரசந்தா - மாதவ் நேபாள் ஆகியோர் அனுமதிப்பார்கள் என உத்தரவாதம் அளித்தனர். ஆனால் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் தன்னை கவிழ்த்துவிட்டு அதிகாரத்து வருவார்கள். எனவே உங்கள் பேச்சை ஏற்க முடியாது என்று ஒலி கூறியுள்ளார். இரு தரப்பு பிரச்னைக்கு தேர்தல் ஒன்றே தீர்வு என்று தெரிவித்திருக்கிறார்.
அதே போல் பிரசந்தா மற்றும் மாதவ் நேபாள், பாராளுமன்ற கலைப்பை திரும்ப பெறும் வரை எதுவும் பேசுவதற்கு இல்லை என சீன குழுவிடம் கூறிவிட்டது. ஒருவேளை பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக தீர்ப்பு வந்தால் கம்யூனிஸ்ட் கட்சி தலைமயிலான மாற்று அரசாங்கத்தை அமைக்க முடியுமா என்றும் சீன குழு ஆராய்ந்தது. மேலும் நேபாள கம்யூனிஸ்ட்டின் இரு பிரிவுகளின் அடுத்த தலைமுறை தலைவர்களையும் குயோ யெஸோ குழு சந்தித்தது. ஆனாலும் எந்த முடிவும் எட்டப்படாமல் ஏமாற்றத்துடன் இன்று சீனா புறப்பட்டு சென்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement