கொடைக்கானல்: கொடைக்கானலில் கொரோனா ஊரடங்கால் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக சுற்றுலா நகரில் விடுதி மற்றும் உணவகங்களில் கேளிக்கை நடனம், கலை நிகழ்ச்சி என பிரத்யேக ஏற்பாடுகள் இருக்கும். இது குறித்து சப் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், விடுதி மற்றும் உணவகங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவில் கேளிக்கை,இனிப்பு வழங்குதல், கூச்சலிடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE