பாட்னா: நிதிஷ் கட்சி எம்.எல்.ஏக்களில் சிலர் எங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். அவர்கள் விரைவில் ஆர்.ஜே.டி கட்சியில் இணைவார்கள் என ஆர்.ஜேடி தலைவர்களில் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
![]()
|
பீகார் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., நிதிஷ்குமாரின் ஐக்கியஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்றன. மொத்தம் உள்ள 243 இடங்களில் பா.ஜ.,74இடங்களிலும் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களையும் கூட்டணியின் பிற கட்சிகள் எட்டு இடங்கள் என மொத்தம் 125 இடங்களில் வெற்றி பெற்றன.
குறைந்தஇடங்களை ஐக்கிய ஜனதா தளம் வென்ற போதிலும் கூட்டணி ஒப்பந்தப்படி நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதியேற்றார்.
இதனிடையே அருணாசலபிரதேச மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.,கட்சிக்கு தாவினர். இது நிதிஷ் குமாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடந்தசில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய நிதிஷ்குமார் எனக்கு முதல்வராக விருப்பம் இல்லைஎனவும்,யாரும் முதல்அமைச்சராகலாம். பா.ஜ., தனதுகட்சியில் இருந்து ஒருவரை முதல்வராக்க முடியும் என்று தெரிவித்து இருந்தார்.
![]()
|
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் துணை தலைவராக வலம் வந்த ஷியாம் ரஜாக் என்பவர் சமீபத்திய தேர்தலின் போது லாலுவின் ஆர்ஜேடி கட்சியில் இணைந்தார். தற்போது அவர் தெரிவித்து இருப்பதாவது: ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் வரையில் எங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.அவர்கள் விரைவில் ஆர்ஜேடி கட்சியில் சேர உள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் 28 ஆக அதிகரிக்க கூடும்.
ஆர்ஜேடி சார்பில் தேஜஸ்வி முதல்வர் ஆவதை ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ., கூட்டணி அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து விட்டனர். என்றார். ரஜாக்கின் கருத்தை மறுத்துள்ள நிதிஷ்குமார் ஆதாரமற்ற தகவலை தருவதாகவும், அவர் சொல்வதில்எந்த அர்த்தமும் இல்லை என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement