சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

முதல்வர் பெயர் என்ன?

Added : டிச 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
முதல்வர் பெயர் என்ன?காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில், 'அம்மா மினி கிளினிக்' திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட முதியோர் பங்கேற்றனர்.ஸ்ரீபெரும்புதுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனி பேசுகையில், 'தமிழக முதல்வர் யார்?' என, கேள்வி எழுப்பினார்.அங்கிருந்தோர், 'பழனிசாமி' என, பதிலளித்தனர். உடனே
பக்க வாத்தியம்


முதல்வர் பெயர் என்ன?



காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில், 'அம்மா மினி கிளினிக்' திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட முதியோர் பங்கேற்றனர்.ஸ்ரீபெரும்புதுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனி பேசுகையில், 'தமிழக முதல்வர் யார்?' என, கேள்வி எழுப்பினார்.அங்கிருந்தோர், 'பழனிசாமி' என, பதிலளித்தனர். உடனே பழனி, 'முதல்வர் பெயரை சரியாக சொன்னதால், உங்கள் அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர், 'தமிழகத்தில் யார் ஆட்சி நடத்துவது என, மக்களுக்கு சந்தேகம் இருக்கு... அதனால தான், எம்.எல்.ஏ., இப்படி கேள்வி கேட்குறார் போல...' என்றார்.
அருகிலிருந்த மூத்த நிருபர், 'இவருக்கு, இந்த முறை சீட் கிடைக்கிறது கஷ்டம் தான்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
31-டிச-202017:39:34 IST Report Abuse
periasamy பாஜாகாவின் நிலை தங்களது விறல் அசைவுக்கு அடங்குபராக அதிமுக தலைமை இருக்க வேண்டும் அப்படி பட்டவர்கள்தான் அவர்கள் தேர்வு செய்வார்கள்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
31-டிச-202006:19:17 IST Report Abuse
D.Ambujavalli இவ்வளவு சுலபமான க்விஸ் போட்டி நடத்தி, தேறினால்தான் உதவித் தொகையா ? சொல்வதற்கில்லை, பா ஜ வேறு தாங்கள்தான் முதல்வரைத் தீர்மானிப்போம் என்கிறார்கள், அதுவரை காத்திருப்போம் என்று யாராவது கூறிவிட்டால் பாவம் இவர் முகத்தை எங்கு ஒளித்துக்கொள்வார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X