சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

முதலில் நீங்கள் திருந்துங்கள்!

Added : டிச 30, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
முதலில் நீங்கள் திருந்துங்கள்!ஆர்.பாரத்வாஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், மக்கள் நீதி மையம் தலைவரும், நடிகருமான கமல், காஞ்சிபுரம் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு, கோவில் அர்ச்சகர்கள் மாலையை கொடுத்து, பூரண கும்ப மரியாதையோடு வரவேற்பு கொடுத்தனர்.இதை பார்க்க வேதனையாகவும், வெறுப்பாகவும் இருந்தது. இந்த வரவேற்பை, ஏற்க கமலும் தவிக்கிறார். அதை ஏற்றுக்


முதலில் நீங்கள் திருந்துங்கள்!



ஆர்.பாரத்வாஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், மக்கள் நீதி மையம் தலைவரும், நடிகருமான கமல், காஞ்சிபுரம் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு, கோவில் அர்ச்சகர்கள் மாலையை கொடுத்து, பூரண கும்ப மரியாதையோடு வரவேற்பு கொடுத்தனர்.இதை பார்க்க வேதனையாகவும், வெறுப்பாகவும் இருந்தது. இந்த வரவேற்பை, ஏற்க கமலும் தவிக்கிறார். அதை ஏற்றுக் கொள்வதற்கு, அவருக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.ஆம்... அவர் தான், பிராமண குலத்தில் பிறந்த, 'அக்மார்க் நாத்திகர்' ஆயிற்றே. அவர் மீது தவறு இல்லை. குற்றம் எல்லாம், பூரண கும்ப மரியாதை கொடுத்த அர்ச்சகர்கள் மீது தான்.எத்தனையோ ஏழை மக்கள், கோவிலுக்கு வருகின்றனர். அவர்களை அன்புடன் வரவேற்று, குறைகளை கேட்டு பரிகாரம் சொல்லுங்கள். அதை விடுத்து நடிகர், அரசியல்வாதிகளுக்கு பூரண கும்ப வரவேற்பு கொடுக்க அலையாதீர். கடவுள் முன் அனைவரும் சமம்.

அர்ச்சகர்களே... பணம் முக்கியம் அல்ல; கடவுளின் அனுகிரகமும், தன்மானமும் தான் முக்கியம்.கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு, யார் சொன்னாலும் பூரண கும்ப மரியாதை கொடுக்காதீர்கள்; அந்நிகழ்வை, தவிர்த்து விடுங்கள்.வேண்டா வெறுப்பாக கோவில் பிரசாதத்தை வாங்கி, கீழே கொட்டுவது உங்களுக்கு அவமானமாக இல்லையா?இந்த அரசியல்வாதிகள், 'பூனைக்கு தோழன்; பாலுக்கும் காவல்' போன்றோர். வெளிப்படையாக சுவாமியை வழிபடக் கூடாது; ஆனால் ஆண்டவன் அருள் வேண்டும்.

ஹிந்து மதத்தை கிண்டல், கேலி செய்ய வேண்டும்; ஆனால் ஹிந்துக்கள் ஓட்டு வேண்டும்.மற்ற மதத்தினரின் சடங்குகளில், ஒரே இடத்தில், மூன்று மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் அரசியல்வாதிகள், ஹிந்துக்களை அவமானப்படுத்துகின்றனர்.இந்த விஷயத்தில் மோடி, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., போன்றோர் நடந்து கொள்ளும் முறையை பாருங்கள். அவர்களை தான், பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்க வேண்டும்.நீங்கள் முதலில் திருந்துங்கள்; போலி நாத்திகவாதிகள் தாமாக மாறுவர்!


எல்லாம் ஒரு நாள் மாறும்!



வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ம்... சீக்கிரம், தேர்தல் வரப்போகிறது; முடிந்த அளவு சுருட்டுவோம்' என்ற நோக்கத்தில், அரசு அலுவலர்கள் செயல்படுவதாக தோன்றுகிறது.இதற்கு, சில நாட்களாக வட்டார போக்குவரத்து, சார் - பதிவாளர், வட்டாட்சியர், வனத்துறை அலுவலகங்களில் நடந்துவரும் சோதனைகளே, கொள்ளையர் பெருகி விட்டனர் என்பதற்கு சாட்சி.அரசு துறை அதிகாரிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் கோடிக்கணக்கான ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்கம், சந்தன கட்டை என, தோண்டத் தோண்ட வெளிவந்து கொண்டே இருக்கினறன.'ஆட்சியாளர்கள் எவ்வழியோ, அரசு அதிகாரிகளும் அவ்வழி' என்ற, மக்கள் நீதி மையத் தலைவர் கமலின் குற்றச்சாட்டு, ஏற்றுக் கொள்ளக் கூடியது.அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லஞ்சம் பெற்று, அரசு வேலை காலிப் பணியிடங்களை வேகமாக நிரப்பி வருகின்றனர்.காவலர், கணினி ஆசிரியர், டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளிலும், மோசடி தலைவிரித்தாடியது.

'லஞ்சம் வாங்குவது, பிச்சை எடுப்பதற்கு சமம்' என, உயர் நீதிமன்றம் சாட்டையில் அடித்தது போல் கருத்தை தெரிவித்திருந்தது. அப்படி இருந்தும், கை நீட்டும் அதிகாரிகளுக்கு சுரணை வரப் போவதில்லை.வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்கள் கொடுத்தும், தேர்தலில் ஓட்டு வாங்கி விடலாம் என, இரு திராவிட கட்சிகளும் நம்பிக்கையோடு இருக்கின்றன. ஏனெனில் லஞ்சம், ஊழல் இல்லாத இடமே இல்லை என்ற நிலை உருவாகி
விட்டது.ஆனால், எல்லாம் ஒரு நாள் மாறும். அது, இந்த தேர்தல் நாளாக இருந்தால், மகிழ்ச்சி!


இட ஒதுக்கீடு ஏன்?



எஸ்.செபஸ்டின், சிவகாசி-, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டிற்கு எதிராக, சிலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.'நம் நாடு சுதந்திரம் பெற்று, 73 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே, இனியும் இட ஒதுக்கீடு தேவையில்லை' என, சிலர் கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள், இட ஒதுக்கீடு ஏன் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியாமல் பேசி வருகின்றனர்.தீண்டாமை கொடுமையை, தாழ்த்தப்பட்டோராக இருந்தால் தான் புரிந்துகொள்ள முடியும்.நம் நாடு, சுதந்திரம் பெற்று, 73 ஆண்டுகளாகி விட்டது; உண்மை தான். ஆனால் இன்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தீண்டாமை போக்கு மாறவில்லை.

தாழ்த்தப்பட்டோர், உயர் ஜாதியினரோடு நட்பு பாராட்ட முடியாது. நாய், பசு, பூனை உள்ளிட்ட உயிரினங்கள் கூட, அவர்கள் வீட்டில் இருக்கும்; ஆனால் தாழ்த்தப்பட்டோர், அந்த வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இடஒதுக்கீடு என்பது, பொருளாதார ரீதியாக மட்டும் உயர்வதற்காக கொடுக்கப்பட்டதல்ல. அனைவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, கொடுக்கப்பட்டது.தாழ்த்தப்பட்டோர் வியாபாரம் செய்வது, எவ்வளவு கடினம் தெரியுமா? அவரின் கடையில், பொருட்கள் வாங்க மாட்டார்கள். தாழ்த்தப்பட்டோரின் நிலையை அறிய, கிராமத்திற்குள் சென்று பாருங்கள்.அவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கும், சமூகத்தில் உரிய மரியாதை கிடைப்பதற்கும் ஒரே வழி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது தான்.தேர்தலின்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை, எந்த கட்சியும், பொது தொகுதியில் வேட்பாளராக நிறுத்தாது. அப்படியே நிறுத்தினாலும், பிற சமூகத்தினர் ஓட்டு அளிக்க மாட்டார்கள்.
தனித்தொகுதி என்ற இட ஒதுக்கீடு இல்லையெனில், தாழ்த்தப்பட்டோரில் இருந்து யாரும், சட்டசபைக்கோ, பார்லிமென்டுக்கோ செல்ல முடியாது.தாழ்த்தப்பட்டோரின் நிலை, தென்மாநிலங்களிலாவது கொஞ்சமாவது பரவாயில்லை; ஆனால், வட மாநிலங்களில் மிகவும் மோசம். இன்றும் அவர்கள் அடிமையாகத்தான் நடத்தப்படுகின்றனர்.
மக்களிடையே, சமத்துவம் மலரும் வரை, தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது, மிகவும் அவசியம்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
31-டிச-202006:36:30 IST Report Abuse
D.Ambujavalli ஆஸ்திகப் பெரியவர்கள் , மடாதிபதிகள் போன்றவர்களுக்கு மட்டுமே பூரண கும்ப மரியாதை கொடுக்கும் வழக்கம் இருந்தது இன்று பதவியில் இருந்து, ஊரை அடித்து உலையில் போடுபவர்களுக்கெல்லாம் மரியாதையைக் கொடுத்து, பூர்ண கும்பத்தை வெறும் சொம்பாக மாற்றிவிட்டார்கள் ஆயிரம் ஜனங்கள் வரும் கோயிலில் அனைவரும் இறைவனின் படைப்புதான் என்ற சமத்துவத்தை அர்ச்சகர்கள் கடைப்பிடிக்க வேண்டும் கூட்டத்தை சமாளிக்க வேண்டுமென்றால், தனிப்பட தரிசனம், பிரசாதம் வழங்கட்டும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-டிச-202003:49:51 IST Report Abuse
J.V. Iyer கோவில் அர்ச்சகர்கள் சாதாரணமாக பூரண கும்ப மரியாதை கொடுக்கமாட்டார்கள். யாராவது அவர்களை கொடுக்க சொல்லி மிரட்டி இருப்பார்கள். இவர்கள் பாவம் ஏழை அர்ச்சகர்கள்தானே வேறு என்ன செய்வார்கள்???
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
31-டிச-202008:40:38 IST Report Abuse
Darmavanஅவர்கள் எந்த பக்கமும் பேச முடியாது.அரங்கேட்ட துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X