டிச., 31, 1929
திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம் புதுாரில், 1929 டிச., 31ம் தேதி பிறந்தவர் ச.வே.சுப்பிரமணியன். துாத்துக்குடி, வ.உ.சி., கல்லுாரி, திருவனந்தபுரம் பல்கலை மற்றும் கேரளப் பல்கலை ஆகியவற்றில், தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்.சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், இயக்குனராகப் பணியாற்றினார். 'இலக்கிய நினைவுகள், ஒன்று நன்று, கம்பன் கற்பனை' உட்பட, ஏராளமான நுால்கள் எழுதியுள்ளார்.தமிழின் தொன்மையான பல படைப்புகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். சாகித்ய அகாடமி கமிட்டியின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில், திருவள்ளுவர் கல்லுாரியை துவக்கினார். 100 ஏக்கர் நிலப்பரப்பில்,
'தமிழூர்' என்ற ஊரை உருவாக்கினார்.சாகித்ய அகாடமியின், 'பாஷா சம்மான்' விருது பெற்ற முதல் தமிழறிஞர் என்ற பெருமை பெற்றார். 2017 ஜன., 12ம் தேதி, தன், 87வது வயதில் காலமானார்.தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE