பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் கார் பம்பர் அகற்றம்; வட்டார போக்குவரத்து குழு நடவடிக்கை

Added : டிச 30, 2020
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் கார், போலீஸ் வாகனங்கள் உட்பட 80 இலகு ரக வாகனங்களில் விபத்தை ஏற்படுத்தும் பம்பர்களை வட்டார போக்குவரத்து குழுவினரால் அகற்றப்பட்டது.இலகு ரக, சரக்கு வாகனங்களின் முன்புறம், பின்புறம் பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. விபத்தின் போது பம்பர்கள் மீது வாகனங்கள் பலமாக மோதுவதால் ஏற்படும் அதிர்வுகளால் பம்பர் மட்டுமே உடையும். வாகனத்துக்கு சேதம்

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் கார், போலீஸ் வாகனங்கள் உட்பட 80 இலகு ரக வாகனங்களில் விபத்தை ஏற்படுத்தும் பம்பர்களை வட்டார போக்குவரத்து குழுவினரால் அகற்றப்பட்டது.இலகு ரக, சரக்கு வாகனங்களின் முன்புறம், பின்புறம் பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. விபத்தின் போது பம்பர்கள் மீது வாகனங்கள் பலமாக மோதுவதால் ஏற்படும் அதிர்வுகளால் பம்பர் மட்டுமே உடையும். வாகனத்துக்கு சேதம் குறைவாக இருக்கும். ஆனால் விபத்தால்ஏற்படும் அதிர்களை பம்பர் தாங்கி கொள்வதால் 'ஷேப்டி பலுான்' இயங்காது. இதனால் உயிர் பலி ஏற்படுகிறது. அதிர்ச்சியில் இருதய நோயாளிகளும் பலியாவது தொடர்கிறது. இலகு ரக வாகனங்களில் பம்பர்களை அகற்றும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமையிலான குழு கலெக்டர் கண்ணன் கார், போலீஸ் வாகனங்கள் உட்பட 80 இலகு ரக வாகனங்களின் பம்பர்களை அகற்றினர்.பம்பர்களை தாமாக முன் வந்து அகற்ற வேண்டும். தாமத்தால் அபராதத்துடன் பம்பர்களை அகற்றப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X