பொது செய்தி

தமிழ்நாடு

6 இடங்களில் மினி கிளினிக் திறப்பு

Added : டிச 30, 2020
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் 6 இடங்களில் மினி கிளினிக்கு களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.மாவட்டத்தில் ஏற்கனவே 20 இடங்களில் மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்ட நிலையில் நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் சங்கரலிங்கபுரம், ராமலிங்காபுரம், அருப்புக்கோட்டை குருந்தமடம், செட்டிக்குறிச்சி, காந்தி மைதானம், திருச்சுழி வெள்ளையாபுரம் ஆகிய 6 இடங்களில்

விருதுநகர் : விருதுநகரில் 6 இடங்களில் மினி கிளினிக்கு களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

மாவட்டத்தில் ஏற்கனவே 20 இடங்களில் மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்ட நிலையில் நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் சங்கரலிங்கபுரம், ராமலிங்காபுரம், அருப்புக்கோட்டை குருந்தமடம், செட்டிக்குறிச்சி, காந்தி மைதானம், திருச்சுழி வெள்ளையாபுரம் ஆகிய 6 இடங்களில் மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார். அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படும் இணை உணவுகளின் பயன்கள், கர்ப்ப காலங்களில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வைக்கப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டார். 12 கர்ப்பிணிகளுக்கு உதவி தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயக்குமரன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கோகுலம் தங்கராஜ், விருதுநகர் ஒன்றிய தலைவர் சுமதி, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், ராஜசேகர், மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X