பொது செய்தி

இந்தியா

விவசாயிகளுடனான பேச்சு ஜன.,4ல் தொடரும்

Updated : ஜன 01, 2021 | Added : டிச 30, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : டில்லி எல்லையில் போராடி வரும், பஞ்சாப் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு நேற்று நடத்திய ஆறாவது சுற்று பேச்சில், இரண்டு அம்சங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேளாண் சட்டங்கள் மற்றும் எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான விவகாரத்தில் இழுபறி தொடர்கிறது. அதையடுத்து, ஜன., 4ல் மீண்டும் சந்தித்து பேச முடிவு
விவசாயிகள், மத்திய அரசு, பேச்சு, தொடரும்

புதுடில்லி : டில்லி எல்லையில் போராடி வரும், பஞ்சாப் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு நேற்று நடத்திய ஆறாவது சுற்று பேச்சில், இரண்டு அம்சங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேளாண் சட்டங்கள் மற்றும் எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான விவகாரத்தில் இழுபறி தொடர்கிறது. அதையடுத்து, ஜன., 4ல் மீண்டும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.




மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில், ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்' என, விவசாய சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், 'சட்டத்தை திரும்பப் பெறும் வாய்ப்பு இல்லை. விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பேசத் தயார்' என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐந்து சுற்று பேச்சு நடந்துள்ள நிலையில், நேற்று ஆறாவது சுற்று பேச்சு நடந்தது. இந்த பேச்சில், 41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பில் விவசாய அமைச்சர், நரேந்திர சிங் தோமர், வர்த்தகத் துறை அமைச்சர், பியுஷ் கோயல், இணையமைச்சர், சோம் பிரகாஷ் பங்கேற்றனர்.

டில்லியில், ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த பேச்சுக்குப் பிறகு, நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: இந்தப் பேச்சு மிகவும் சுமுகமாக நடந்தது. புதிய மின்சார சட்டம் மற்றும் வைக்கோல் எரிப்பதற்கு அபராதம் விதிப்பது தொடர்பாக, விரிவாக பேசப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மூன்று வேளாண் சட்டங்கள் எதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து விளக்கினோம். ஆனால், அவற்றை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்பதற்கு சட்டப்பூர்வமான உறுதியை கேட்கின்றனர். இந்த நடைமுறை தொடரும் என, அரசு தரப்பில் ஏறகனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, ஜன., 4ம் தேதி மீண்டும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.



அப்போது, இந்த இரண்டு பிரச்னைகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படும்.விவசாயிகள், மிகவும் அமைதியான முறையில், எந்தப் பிரச்னையும் ஏற்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடும் குளிர் நிலவுவதால், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளை, போராட்டத்தில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என, வலியுறுத்தியுள்ளோம்.இந்தப் பேச்சின் மூலம், சில முன்னேற்றத்தை கண்டுள்ளோம். அடுத்த பேச்சில், முழு தீர்வு ஏற்பட்டு, போராட்டம் கைவிடப்படும் என, நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

'மின்சார சட்டம் மற்றும் வைக்கோல் எரிப்பதற்கு அபராதம் தொடர்பாகவே முக்கியமாக பேசப்பட்டது. அதில், உடன்பாடும் ஏற்பட்டுள்ளது. 'எங்களுடைய முக்கிய கோரிக்கைகள் குறித்து, அடுத்த பேச்சில் விவாதிக்கப்படும்' என, விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். முன்னதாக, விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, நிபுணர் குழுவை அமைக்கத் தயாராக இருப்பதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மறுத்து விட்டனர்.


விவசாயிகளுடன் உணவு


இதற்கு முன் நடந்த பேச்சுகளின்போது, அரசு அளித்த உணவை ஏற்க, விவசாய சங்கப் பிரதிநிதிகள் மறுத்தனர். தாங்கள் கொண்டு வந்த உணவையே அவர்கள் எடுத்துக் கொண்டனர். தேநீர், தண்ணீர் கூட ஏற்க மறுத்தனர்.

இந்நிலையில், நேற்று நடந்த பேச்சின்போதும், விவசாய சங்கப் பிரதிநிதிகள், உணவுகளை எடுத்து வந்தனர். பேச்சில் ஈடுபட்ட அமைச்சர்கள், நரேந்திர சிங் தோமர், பியுஷ் கோயல், சோம் பிரகாஷ் ஆகியோர் அவர்களுடன் அமர்ந்து, விவசாயிகள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டனர்.


பிரதமருடன் பேசுங்கள்


பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக பேசும்படி, விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு, அகாலி தளம், காங்., கட்சிகள் ஆலோசனை வழங்கியுள்ளன.

''பேச்சு தொடர்ந்து இழுபறியாக நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின் வலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் சிக்கி விடக்கூடாது. பிரதமருடன் நேரடியாக பேச வலியுறுத்த வேண்டும்,'' என, அகாலி தளத்தைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியுள்ளார்.

''வெற்றியின் விளிம்பில் விவசாயிகள் உள்ளனர். சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து, பிரதமருடன் நேரடியாக அவர்கள் பேச வேண்டும்,'' என, காங்.,கின் பஞ்சாப் தலைவர் சுனில் ஜோகர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
31-டிச-202019:18:50 IST Report Abuse
sankaseshan கும்பிடாதே சாமி இத்தாலிய குடும்ப ஆட்சியில் நாடு சுபிட்ஷமாக இருந்ததோ ? உன்னைப்போல அடிமைகள் முட்டுக்கொடுக்க தயார் எனும்போது நாட்டுல அமைதி நிலவுமா ?
Rate this:
Cancel
31-டிச-202018:15:13 IST Report Abuse
kulandhai Kannan காங்கிரஸ், திமுக வகையறா பேச்சு வார்த்தை தோற்க வேண்டிக் கொள்ளும்.
Rate this:
Cancel
31-டிச-202016:07:51 IST Report Abuse
ஆரூர் ரங் பல நாடுகளில் வீட்டுக் குப்பையை எரித்தாலே சிறை. இங்கு லட்சம் டன் வைக்கோலை எரித்து☻ பலர் சாகக்😥 காரணமானவர்களோடு சமாதான்ப் பேச்சு வார்த்தை. நாடு வெளங்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X