பொது செய்தி

இந்தியா

பிரிட்டன் விமான சேவை ஜன.,7 வரை ரத்து

Updated : ஜன 01, 2021 | Added : டிச 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : 'மரபணு உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா பாதிப்பு உள்ளதால், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கான விமான சேவை தடை, ஜன., 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.பிரிட்டனில் தென்பட்ட, மரபணு உருமாற்றம் அடைந்துள்ள, கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதையடுத்து,
பிரிட்டன், விமான சேவை, ரத்து, கொரோனா வைரஸ், ஹர்தீப் சிங் புரி

புதுடில்லி : 'மரபணு உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா பாதிப்பு உள்ளதால், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கான விமான சேவை தடை, ஜன., 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் தென்பட்ட, மரபணு உருமாற்றம் அடைந்துள்ள, கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதையடுத்து, பிரிட்டனுக்கான விமான சேவைக்கு தடை விதித்து, கடந்த, 23ம் தேதி, மத்திய அரசு உத்தரவிட்டது.இந்த வைரஸ் நம் நாட்டிலும் பரவியுள்ள நிலையில், பரிசோதனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதையடுத்து, பிரிட்டன் விமான சேவைக்கான தடையை நீட்டிக்கும்படி, மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை
அளித்துள்ளது.

இது குறித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளதாவது: பிரிட்டனுக்கான விமான சேவை தடை, ஜன., 7 வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்பின், மிகக் கடுமையான நிபந்தனைகளுடன், விமான சேவையை துவங்குவது குறித்து ஆராயப்படும். அது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு துவக்கத்தில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபோது, சர்வதேச விமான சேவை, மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை மீட்டு வருவதற்காக, 'வந்தே பாரத்' என்ற பெயரில் விமான சேவை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சர்வதேச விமான சேவை முழுமையாக துவங்கவில்லை.

இந்நிலையில், பிரிட்டன் உட்பட, 24 நாடுகளுடன், 'ஏர் பபுள்' என்ற பெயரில், பாதுகாப்பு அம்சங்களுடன் விமான சேவை துவங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.தற்போது, பிரிட்டனுக்கான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு


பிரிட்டனில் பரவ துவங்கியுள்ள, மரபணு உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவில், ஆறு பேருக்கு இருப்பது, நேற்று முன்தினம் உறுதியானது. அவர்கள் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், பழகியவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், டிச., 9 - 22 வரை வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக பிரிட்டனில் இருந்து வந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.அதில், வைரஸ் தொற்று உறுதியானவர்களுக்கு, புதிய வகை கொரோனா பாதிப்பு உள்ளதா என்ற பரிசோதனை செய்யப்படுகிறது.இதற்காக நாட்டின், 10 இடங்களில், மரபணு பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று மேலும், 14 பேருக்கு, மரபணு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுவரை, 20 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
31-டிச-202001:20:20 IST Report Abuse
கும்புடுறேன் சாமி பிரிட்டனுக்குத்தான் விமான சேவை ரத்து நல்ல வேல யூ கே , இங்கிலாந்து போறதுக்கு எந்த பிரச்னையும் இல்ல லலித் மோடி , நீரவ் மோடி விஜயமல்லய்யாவ எப்படியும் கூட்டிட்டு வந்துரலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X