புதுடில்லி:சமூக வலைதளத்தில் திருட்டுத்தனமாக நுழைந்து, ஆபாசப் படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி, பணம் பறித்த இளைஞரை, டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வாறு, 100 பெண்களை மிரட்டியுள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த, ஒரு இளம் பெண்ணுக்கு, செல்போனில் ஒருவர் அழைத்துள்ளார். 'உங்களுடைய ஆபாச படங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை சமூக வலை தளத்தில் வெளியிட்டு விடுவேன்' என, பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.அந்தப் பெண் ஆதாரம் கேட்டபோது, சில படங்களை அனுப்பிஉள்ளார்.அது போலி என்பதை உணர்ந்த அந்த பெண், டில்லி போலீசில் புகார் கொடுத்தார்.
தீவிர தேடுதலுக்குப் பின், நொய்டாவைச் சேர்ந்த, சுமித் ஜா, 26, என்பவரை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:பட்டதாரியான சுமித் ஜா, ஒருவருடைய சமூக வலைதளத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை திருடுவார். அந்த படங்களில் திருத்தம் செய்து, ஆபாசமாக மாற்றுவார். பின், வலையில் சிக்கிய பெண்ணை தொடர்பு கொண்டு, பணம் கேட்டு மிரட்டுவார்.
சில பெண்களிடம், அந்தரங்க உறுப்புகளின் படங்களையும் அனுப்பும்படி கேட்டுள்ளார். இவ்வாறு, 100 பெண்களை மிரட்டி, பணம் பறித்துள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு, போலீசார் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE