பொது செய்தி

இந்தியா

டில்லி, அமிர்தசரஸ், உதய்பூரில் மக்களை வாட்டும் கடுங்குளிர்

Added : டிச 30, 2020
Share
Advertisement
புதுடில்லி:டில்லி, அமிர்தசரஸ், உதய்பூர் உட்பட வடமாநிலங்களின் பல்வேறு நகரங்களில் நிலவும் கடும் குளிரால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.பெரும்பாலான வடமாநிலங்களில், தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், டில்லியில் குறைந்தபட்சமாக, 3.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இது கடந்த, 50

புதுடில்லி:டில்லி, அமிர்தசரஸ், உதய்பூர் உட்பட வடமாநிலங்களின் பல்வேறு நகரங்களில் நிலவும் கடும் குளிரால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெரும்பாலான வடமாநிலங்களில், தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், டில்லியில் குறைந்தபட்சமாக, 3.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இது கடந்த, 50 ஆண்டுகளில் பதிவான மிகக்குறைந்த வெப்பநிலையாக இருக்கிறது.

ராஜஸ்தானின் சுரு பகுதியில், 1.5 டிகிரி செல்ஷியஸ், அமிர்தசரசில், 1.8; சிகார் பகுதியில், 3; உதய்பூரில், 3.6; ராஜஸ்தானின் மவுன்ட் அபுவில், 4 டிகிரி செல்ஷியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகி உள்ளது.ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை, மைனஸ் டிகிரியில் பதிவாகி வருகிறது. இப்பகுதிகளில் வழக்கமான நிலையுடன் ஒப்பிட்டால், தற்போது கடும் குளிர் நிலவுகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X