புதுடில்லி:பிரிட்டனில் இருந்து, இந்தியா வந்த, 20 பேருக்கு, அதிக வீரியம் கொண்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதைதொடர்ந்து, ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை தீவிர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் நடத்துமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்திஉள்ளது.
நாடு முழுவதும், கடந்த, 24 மணி நேரத்தில், 20 ஆயிரத்து, 549 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது, நேற்று முன்தினத்தை விட, 25 சதவீதம் அதிகம். ரத்துஇதற்கிடையே, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில், அதிக வீரியம் கொண்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த, 9ம் தேதியில் இருந்து, கடந்த, 22 வரை, இந்தியா வந்த வெளிநாட்டு பயணியர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியினை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.பிரிட்டனில் இருந்து வந்த, 140 பயணியருக்கு, உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா தொற்று உள்ளதா என கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 20 பேருக்கு, புதிய வகை தொற்று இருப்பது உறுதியானது. இவர்களால், தொற்றுப் பரவல், 70 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதையடுத்து, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப் பட்டுஉள்ளது. கண்காணிப்புஅதன் விபரம்:பிரிட்டனில் இருந்து, உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் பரவி வருவதால், புத்தாண்டு கொண்டாட்டங்களை, பல்வேறு கட்டுப் பாடுகளுடன் நடத்த வேண்டும்.
மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில், மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE