பொது செய்தி

இந்தியா

மதமாற்றம் சட்டம் வேண்டாம் 'மாஜி' அதிகாரிகள் கடிதம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
புதுடில்லி:'வெறுப்பு அரசியலின் மையமாக, உத்தர பிரதேசம் மாறி வருகிறது. மதபேதம் என்ற விஷத்தை பரப்ப, அரசு அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது. 'அதனால், மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 104 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு

புதுடில்லி:'வெறுப்பு அரசியலின் மையமாக, உத்தர பிரதேசம் மாறி வருகிறது. மதபேதம் என்ற விஷத்தை பரப்ப, அரசு அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது. 'அதனால், மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 104 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. திருமணம் செய்வதற்காக கட்டாய மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில், சமீபத்தில், இங்கு அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டது. இது போன்ற சட்டத்தை அமல்படுத்த, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள மத்திய பிரதேசத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 104 பேர், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். முன்னாள் வெளியுறவுச் செயலர், நிருபமா ராவ்; முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஷிவ்சங்கர் மேனன்; முன்னாள் தலைமை தகவல் கமிஷனர், வஜாஹத் ஹபிபுல்லா உள்ளிட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:ஒரு காலத்தில் கங்கை - யமுனை நாகரிகம் பாய்ந்த, உத்தர பிரதேசம், சமீப காலமாக, வெறுப்பு அரசியலின் மையமாக மாறி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. மக்களை பிளவுபடுத்திப் பார்ப்பது, மதவெறி ஆகியவை அதிகரித்து உள்ளன. மதபேதம் என்ற விஷத்தை பரப்புவதற்கு, அரசு நிர்வாகம் பயன்படுத்தப்படுகிறது. அரசு அதிகாரிகள் இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக, மதமாற்ற தடை சட்டம் என்பது, குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த இளைஞர்களை குற்றவாளியாக்கும், தனக்கு விருப்பமான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் இளம் பெண்களின் சுதந்திரத்தை, உரிமையை பறிக்கும் வகையிலும் அமைந்துஉள்ளது. மக்களுக்கு எதிரான இந்த சட்டத்தை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X