ஹரியானா உள்ளாட்சி தேர்தல் பா.ஜ.,வுக்கு பின்னடைவு

Added : டிச 30, 2020
Share
Advertisement
சண்டிகர்:டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக, ஹரியானா உள்ளாட்சி தேர்தலில், ஆளும் பா.ஜ., பின்னடைவை சந்தித்துள்ளது.ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான, ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார்.ஹரியானா மாநில உள்ளாட்சி

சண்டிகர்:டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக, ஹரியானா உள்ளாட்சி தேர்தலில், ஆளும் பா.ஜ., பின்னடைவை சந்தித்துள்ளது.

ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான, ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

ஹரியானா மாநில உள்ளாட்சி தேர்தல், கடந்த, 27ல் நடந்தது. அம்பாலா, பஞ்ச்குலா மற்றும் சோனிபாட் மாநகராட்சிக்கும், ரேவாரி மாவட்ட நகராட்சிக்கும், ரோடக் மாவட்டத்தின், சம்ப்லா, ரேவாரியின் தாருஹேரா, ஹிசாரின் உக்லானா நகராட்சி கமிட்டிக்கும் ஓட்டுப்பதிவுகள் நடந்தன.ஓட்டு எண்ணிக்கை, நேற்று காலை, 8:00 மணிக்கு துவங்கியது.

சோனிபாட் மாநகராட்சியில், காங்., மேயர் வேட்பாளர் நிகில் மதன், 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அம்பாலாவில், ஹரியானா ஜனசேத்தனா கட்சியைச் சேர்ந்த மேயர் வேட்பாளர் சக்தி ராணி சர்மா, 8,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பஞ்ச்குலா மாநகராட்சியில், பா.ஜ., முன்னிலை வகிக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி, அங்கு ஓட்டுகள் இன்னும் முழுமையாக எண்ணி முடிக்கப்படவில்லை.

புறநகர் பகுதியான தாருஹேரா மற்றும் உக்லானாவில், வலுவான கட்சியாக கருதப்படும், பா.ஜ., கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி, தோல்வியை தழுவியது.டில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக, ஹரியானாவின் ஆளும் பா.ஜ., - ஜனநாயக ஜனதா கட்சியினர், உள்ளாட்சி தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளதாக, காங்., தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X