அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அசைக்க முடியாது': முதல்வர் பழனிசாமி பதிலடி

Updated : டிச 31, 2020 | Added : டிச 30, 2020 | கருத்துகள் (47+ 28)
Share
Advertisement
திருச்சி :''ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும், அ.தி.மு.க.,வை உடைக்க முடியாது. அ.தி.மு.க.,வின் ஒரு தொண்டன் மீதும் கை வைக்க முடியாது,'' என, திருச்சியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் இ.பி.எஸ்., பேசினார். தி.மு.க.,வின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கும், அவர் பதிலடி கொடுத்தார்.திருச்சி மாவட்டத்தில் உள்ள, ஒன்பது சட்டசபை தொகுதிகளில், இரண்டு நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக,
ஸ்டாலின், மு.க.ஸ்டாலின்,  அதிமுக, அ.தி.மு.க.,  முதல்வர் பழனிசாமி, எடப்பாடிபழனிசாமி, எடப்பாடி கே.பழனிசாமி, இபிஎஸ், முதல்வர் இபிஎஸ், திமுக, தி.மு.க., சவால், குடும்ப கட்சி, தமிழக அரசு, தமிழகம்,

திருச்சி :''ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும், அ.தி.மு.க.,வை உடைக்க முடியாது. அ.தி.மு.க.,வின் ஒரு தொண்டன் மீதும் கை வைக்க முடியாது,'' என, திருச்சியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் இ.பி.எஸ்., பேசினார். தி.மு.க.,வின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கும், அவர் பதிலடி கொடுத்தார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள, ஒன்பது சட்டசபை தொகுதிகளில், இரண்டு நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று வந்தார். திருச்சி மாவட்ட எல்லையில், அ.தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொட்டியத்தில் நடந்த கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது:மக்களுக்காக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், அ.தி.மு.க., செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையில், 'எந்த திட்டமும் நடக்கவில்லை' என, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசுகிறார்.


சிறப்பான ஆட்சி


அ.தி.மு.க., ஆட்சியில், 52 லட்சம் மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்பட்டுள்ளதை அவரால் மறுக்க முடியுமா? தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தனர் என்று, உருப்படியாக ஒரு திட்டத்தை ஸ்டாலினால் கூற முடியுமா?ஜெ., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., மறைந்து விடும் எனக் கூறி, கட்சியை அழிக்க திட்டமிட்டனர். அத்திட்டங்கள் தவிடுபொடியாகி விட்டன. மக்களின் துணையுடன், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான ஆட்சி நடக்கிறது.

தற்போது, அ.தி.மு.க.,வை உடைக்க, ஸ்டாலின் திட்டமிடுகிறார். அ.தி.மு.க., வலிமையான இயக்கம். அ.தி.மு.க., எந்தக் காலத்திலும் உடையாது. ஒரு அ.தி.மு.க., தொண்டனைக் கூட தொட்டுப் பார்க்க முடியாது. ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும், அ.தி.மு.க.,வை உடைக்க முடியாது.ஸ்டாலின் முதலில், அவர் கட்சியை காப்பாற்றி கொள்ளட்டும். ஒரு ஸ்டாலின் இல்லை, ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும், அ.தி.மு.க.,வை தொட்டுப் பார்க்க முடியாது.

நிலமற்ற விவசாயிகளுக்கு, 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என பொய் சொல்லி, ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க.,வினர், மக்களை ஏமாற்றி விட்டனர். கடந்த லோக்சபா தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.


தமிழகம் முதலிடம்


தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, கர்நாடகாவின் கபினி அணை, கருணாநிதி ஆட்சியில் தான் கட்டப்பட்டது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, தி.மு.க., ஆட்சி தான். 50 ஆண்டு கால காவிரி நதி நீர் பிரச்னையை தீர்த்தது, அ.தி.மு.க., அரசு. சட்டம் -- ஒழுங்கைப் பேணிக் காப்பதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

கொரோனாவால், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அ.தி.மு.க., அரசின் நலத் திட்டங்கள் தொடர, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.


மண்வெட்டி பிடித்த முதல்வர்திருச்சி, தொட்டியத்தில் பிரசாரத்தை முடித்த முதல்வர் இ.பி.எஸ்., பண்ணைத் தோட்டம் பகுதியில் வாழை, வெற்றிலை, கரும்பு விவசாயிகளை சந்தித்தார். தொட்டியம் எம்.புதூர் பகுதியில் வாழைத் தோட்டத்தை பார்வையிட்ட முதல்வர், அங்கிருந்த விவசாயிடம், சாகுபடி குறித்து கேட்டறிந்ததோடு, அவரிடமிருந்து மண்வெட்டியை வாங்கி, வயலுக்குள் இறங்கி, மண்ணை வெட்டி சீர்படுத்தினார்.


குடும்ப கட்சி தி.மு.க.,


நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், நேற்று காலை முதல்வர் பேசியதாவது:தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நிறைய கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை வெளியிடுவார். பிரசாரம் மேற்கொள்வார். ஆனால், ஒன்றும் செய்யமாட்டார்.அவர்கள் ஆட்சியில் என்ன நன்மை கிடைத்தது, நாட்டு மக்களுக்கு? எண்ணிப் பாருங்கள்! ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கும், இல்லம் போய் தட்டிக் கொடுத்த அரசு, அ.தி.மு.க., அரசு.ஏழை, எளிய மக்களின் குழந்தைகளின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளது இந்த அரசு. கடைக்கோடி குடிசையில் வாழும் குழந்தைகளும், இந்த ஆட்சியில் மருத்துவம் படிக்கின்றனர்.

தி.மு.க., குடும்ப கட்சி. அங்கு, குடும்பத்தில் இருப்பவர்கள்தான் பதவிக்கு வர முடியும்.அரசர்கள் ஆளும்போது, அரசருக்கு பின், குடும்பத்தில் இருப்பவர்கள் தான், முடிசூடிக் கொள்வர். அதுபோல், தமிழகத்தை பட்டா போடத் துடிக்கும், தி.மு.க.,வுக்கு, இந்த தேர்தலில், மரண அடியை கொடுங்கள். அ.தி.மு.க.,வில், சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் வரை உயரலாம். ஆனால், தி.மு.க.,வில் ஒருக்காலும் நடக்காது.தி.மு.க.,வின் அராஜக ஆட்சிக்கு வழி விடாமல், அ.தி.மு.க.,வை தொடர்ந்து மக்கள் ஆதரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, மலைவாழ் மக்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

Advertisement
வாசகர் கருத்து (47+ 28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
24-ஜன-202117:13:06 IST Report Abuse
ocean இரும்பு வேலாக இருந்தால் வாங்கி பார்த்து விட்டு திருப்பி கொடுத்து கொடுத்தவரை பாரத்து கிண்டல் செய்திருப்பார். வாங்கியது முன்னூறு கிலோ வெள்ளி வேல். அதை வேண்டாம் என்பாரா. அதை வாங்கி கொடுத்த கை அப்படி. ஜெயித்தால் மந்திரி பதவிக்கு இது அச்சாரம்.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
24-ஜன-202117:04:49 IST Report Abuse
ocean ஆராச்சி அரசியல் வேறு.தொழில் வேறு. வாரிசு அரசியலுக்கு இது மன்னர் ஆட்சி இல்லை. மக்களாட்சி. புரிந்ததா.
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
31-டிச-202018:42:07 IST Report Abuse
srinivasan 1000 Stalin vanthalum...appo 1000 vilakku thokuthi stalinikku sarippadathu.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X