கோவை: முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருப்பவர் உஷா. இவர் பள்ளிகளின் உரிமம் புதுப்பித்தலுக்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு, 8:30 மணியளவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., கணேசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளிட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், புத்தாண்டு பரிசு மற்றும் பள்ளி உரிமம் புதுப்பித்தலுக்காக கொடுக்கப்பட்ட லஞ்சப்பணம் என, தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், லஞ்சம் பெற்றது குறித்து போலீசார் இன்று வழக்கு பதிய உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE