சென்னை: தமிழக அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர், மத்திய அரசு பணிக்கு செல்கிறார். அவர், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில், உதவி பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக இருந்த, பணீந்திர ரெட்டி, இந்தாண்டு ஜூன், 18ல், வருவாய்த்துறை நிர்வாக கமிஷனராக மாற்றப்பட்டார். அறநிலையத் துறை புதிய கமிஷனராக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக இருந்த பிரபாகர், செப்டம்பரில் பொறுப்பேற்றார்.அவர் பதவியேற்ற பின், அறநிலையத்துறை ஊழியர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்தார்.
மிகவும் எளிமையாகவும், அனைவருடன் நட்புடன் பழகினார்.வீரசோழபுரம், அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலத்தை அரசுக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆட்சேபனை கூட்டத்தில், ஆன்மிகவாதிகள், ஊர்மக்கள், கடுமையாக நடந்து கொண்டபோதும், மிகவும் நேர்த்தியாக கையாண்டவர்.இந்நிலையில், பிரபாகர், மத்திய அரசு பணிக்கு சென்றுள்ளார்.
மத்திய அரசின் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், 'யுனிக் ஐடென்டிபிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியா' நிறுவனத்தின், பெங்களூரு மண்டல அலுவலக உதவி பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE