பொது செய்தி

தமிழ்நாடு

பிரிட்டன் 'ரிட்டர்ன்' 40 பேருக்கு தொற்று

Added : டிச 31, 2020
Share
Advertisement
சென்னை:பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என, 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 236 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 70 ஆயிரத்து, 196 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. அதில், சென்னையில், 275 பேர்; கோவையில், 91 பேர் உட்பட, 942 பேருக்கு தொற்று

சென்னை:பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என, 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 236 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 70 ஆயிரத்து, 196 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. அதில், சென்னையில், 275 பேர்; கோவையில், 91 பேர் உட்பட, 942 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பிரிட்டனில் இருந்து வந்தவர்களில், ஒருவருக்கு நேற்று தொற்று உறுதியானது.

இதன் வாயிலாக, பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், 20 பேர்; அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், 20 பேர் என, 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒருவருக்கு மட்டுமே, புதிய ரக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற வர்களின் மாதிரிகள் பரிசோதனையில் உள்ளன. தமிழகத்தில் இதுவரை, 1.41 கோடி மாதிரிகள் பரிசோதனையில், எட்டு லட்சத்து, 17 ஆயிரத்து, 77 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்தவர்களில், 1,060 பேர் நேற்று குணமடைந்தனர்.

இவர்களுடன் சேர்த்து, ஏழு லட்சத்து, 96 ஆயிரத்து, 353 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, சென்னையில், 2,678 பேர்; கோவையில், 821 பேர் என, 8,615 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றால், நேற்று, சென்னையில், ஏழு பேர் உட்பட, 17 பேர் இறந்தனர்; இவர்களையும் சேர்த்து, இதுவரை, 12 ஆயிரத்து, 109 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X