கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு 'டோக்கன்' ஐகோர்ட்டில் அரசு தகவல்

Added : டிச 31, 2020
Share
Advertisement
சென்னை:'அரசின் அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே, பொங்கல் பரிசு வழங்கப்படும்; அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு:பொங்கல் பரிசு தொகையாக, தலா, 2,500 ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றை, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதாக, அரசு

சென்னை:'அரசின் அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே, பொங்கல் பரிசு வழங்கப்படும்; அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு:பொங்கல் பரிசு தொகையாக, தலா, 2,500 ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றை, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதாக, அரசு அறிவித்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு இடையில், இந்த திட்டத்தையும், முதல்வர் துவக்கி வைத்தார். அதில் இருந்து, நோக்கம் என்ன என்பது தெரிகிறது.


விசாரணை



அரசு நிதியில் இருந்து, பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது; ஆளும் கட்சியின் நிதியில் இருந்து அல்ல.ஆனால், மக்களுக்கு வழங்கப்படும், டோக்கனை பார்த்தால், பொங்கல் பரிசை, அ.தி.மு.க., கட்சி வழங்குவது போல் காட்டப்படுகிறது. முதல்வரின் பெயர், அவரது புகைப்படம், அ.தி.மு.க., கொடி வண்ணம் அச்சிடப்பட்டு, 'டோக்கன்' வழங்கப்படுகிறது. மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களின் புகைப்படங்கள், அந்தந்த மாவட்டங்களில் இடம் பெறுகின்றன.

ஆளும் கட்சி நிர்வாகிகள் பெயர், புகைப்படம், சின்னம் இடம்பெறாத டோக்கனுக்கு மட்டுமே, பொங்கல் பரிசு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார். ஆளும் கட்சியினர், டோக்கன் வழங்கும் காணொலி காட்சியை, புகைப்படங்களை, நீதிபதிகளிடம் காட்டினார்.


சுற்றறிக்கை

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''இரு மாவட்டங்களில், கட்சியினர் ஆர்வ மிகுதியால், அ.தி.மு.க., தலைவர்கள் புகைப்படம் உடைய டோக்கன் வழங்கி உள்ளனர். மற்ற இடங்களில், அதிகாரபூர்வ டோக்கன் தான் வழங்கப்படுகிறது. ''அதிகாரபூர்வ டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசு பொருள் வழங்கப்படும் என சுற்றறிக்கை அனுப்ப உள்ளோம்,'' என்றார்.இதையடுத்து, அதிகார பூர்வமாக வழங்கப்படும் டோக்கன் தவிர்த்து, வேறு எந்த டோக்கனும் வழங்கக் கூடாது; இன்று மாலைக்குள் சுற்றறிக்கை வெளியிடும்படி, அரசுக்கு, நீதிபதிகள் அறிவுறுத்தினர். சுற்றறிக்கை வெளியிடவில்லை என்றால், நீதிமன்றத்தை அணுகலாம் எனவும், நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X