அரசியல் செய்தி

தமிழ்நாடு

மன உளைச்சலில் ரஜினி: அர்ஜுனமூர்த்தி தகவல்

Added : டிச 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமுடையவர், ரஜினி. தற்போது மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்,'' என, ரஜினி துவங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:என்னால் மிகவும் மதிக்கப்படும் ரஜினி, மிகவும் மன உளைச்சலில் உள்ளார். அவர், தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என, மிகவும்

சென்னை:''தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமுடையவர், ரஜினி. தற்போது மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்,'' என, ரஜினி துவங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:என்னால் மிகவும் மதிக்கப்படும் ரஜினி, மிகவும் மன உளைச்சலில் உள்ளார். அவர், தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என, மிகவும் ஆர்வமுடன் இருந்தார். மிகுந்த வலிமருத்துவர்கள் அறிவுரையால், அவரால் செயல்பட முடியவில்லை. எனவே, மிகுந்த வலியுடன், இந்த முடிவை எடுத்துள்ளார்.

எனக்கு ஒரு கண் மோடி; மற்றொரு கண் ரஜினி. இருவரும் இந்திய மக்களுக்கும், தமிழகத்திற்கும் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என நினைத்தனர். அந்த ஆர்வம் காரணமாக, மாற்றத்தை ஏற்படுத்த, ரஜினியோடு இணைந்து செயல்பட்டேன். தற்போது, ரஜினி எடுத்த முடிவை, யாரும் விமர்சிக்க வேண்டாம். காலம் கனியும். இறைவன் அருள் உள்ளது.தமிழ் மக்களோடு சேர்ந்து, அனைவரும் அவரது முடிவுக்கு, ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதே, என் வேண்டுகோள்.

அவரோடு இருப்பது தான் என் நிலைப்பாடு. அவர், மக்கள் சேவை செய்வேன் என, கூறி உள்ளார். அப்படி செய்யும்போது, அவருக்கு துணை நிற்பேன். அவருடன் பயணிப்பதே என் ஆசை. தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக, ரஜினியோடு இணைந்தேன். ரஜினி மன உளைச்சலில் இருக்கிறார். விருப்பம்தமிழக மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு, அதற்காக திட்டமிட்டார். அதை நிறைவேற்ற முடியாததால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இப்போது, அவருடன் இருக்கவே விரும்புகிறேன்.அவர் மென்மையான மனம் கொண்டவர். தன்னால் யாரும் கஷ்டப்படக் கூடாது என நினைப்பவர்.தன்னிச்சையாக முடிவெடுப்பதில்லை. நிர்ப்பந்தத்திற்கு அடிபணிய மாட்டார். தமிழகத்தில், 2021 சட்டசபை தேர்தல், மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு, அர்ஜுனமூர்த்தி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
31-டிச-202009:13:06 IST Report Abuse
Bhaskaran அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம் எடுக்கும்போது இறுதியில் எம்ஜியார் சரியாக கால்ஷீட் கொடுக்கவில்லை .எனவே மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் கரடிமுத்து என்னும் நடிகரை வைத்து டூப் போட்டு படத்தை முடித்துவிட்டார் பின் எம்ஜியார் நடிக வரும்போது படம் முடிஞ்சுபோச்சுண்ணு அதிர்ச்சி தந்தார் .பத்ரகாளி படம் ராணிச்சந்திரா என்னும் நடிகை இல்லாமல் பலகாட்சிகளை முடித்து திரைஇட்டனர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X