காரைக்குடி : அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில், மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மார்கழி பாவை விழா நடக்கிறது.
செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி தெரிவிக்கையில்;ஜன.5 ஆம் தேதி நடக்கும் பாவை விழாவில் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடக்கிறது.முதல்பிரிவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களும், இரண்டாம் பிரிவில் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களும், மூன்றாம் பிரிவில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் போட்டிகள் நடக்கிறது.மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாணவர்கள் ஜன.5 ஆம் தேதி அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலுக்கு வரவேண்டும்.
போட்டிக்கு ஜன.4 ஆம் தேதி மாலை 5:00 மணி வரை அரியக்குடி கோயிலில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.வெற்றி பெறும் மாணவர்களுக்கு அந்தந்த பிரிவில் 3 பரிசுகளும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிழ்களும் வழங்கப்படும். எனறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE