ஆர்.எஸ்.மங்கலம் : கிழக்கு கடற்கரை சாலை கடலுார் அருகே உகந்தாங்குடி குடிநீர் ஊரணியை சுற்றி வளர்ந்து உள்ள மரங்களை அகற்றி வேலி அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த ஊரணியில் மழை காலத்தில் தேக்கப்படும் தண்ணீரை அப்பகுதியினர் பல ஆண்டுகளாக குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். கடலோர பகுதிகளில் ஆண்டு தோறும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், நடப்பு ஆண்டில் பெய்த மழையை பயன்படுத்தி கிராமத்தினர் ஊரணியை நிரப்பியுள்ளனர். இந்த ஊரணி நீரை பாதுகாக்கும் விதமாக ஊரணியை சுற்றி கம்பி வேலி இல்லாததால், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பயணிகள் மற்றும் கால்நடைகள் ஊரணி நீரை மாசுபடுத்தி வருகின்றன. எனவே குடிநீரை பாதுகாக்கும் விதமாக கிராமத்தினர் ஊரணியை சுற்றி கருவேல முட்களை போட்டு அடைத்து வைத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE