பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று குடியமர்வு திட்டம் பட்டா வழங்க ஆலோசனை

Added : டிச 31, 2020
Share
Advertisement
கூடலுார் : முதுமலை மாற்று குடியமர்வு திட்டத்தின் உட்கோட்ட கூட்டம், கூடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.ஆர்.டி.ஓ., ராஜ்குமார் தலைமை வகித்தார்.அதில், வனத்துறையினர் பேசுகையில்,'மாற்றிட திட்டம் மூலம், முதல் மற்றும் இரண்டாவது கட்டமாக அரசின் முழு பயன்களையும் பெற்ற பின்பும், பலர் அங்கிருந்து வெளியேறாமல் உள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற

கூடலுார் : முதுமலை மாற்று குடியமர்வு திட்டத்தின் உட்கோட்ட கூட்டம், கூடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.ஆர்.டி.ஓ., ராஜ்குமார் தலைமை வகித்தார்.

அதில், வனத்துறையினர் பேசுகையில்,'மாற்றிட திட்டம் மூலம், முதல் மற்றும் இரண்டாவது கட்டமாக அரசின் முழு பயன்களையும் பெற்ற பின்பும், பலர் அங்கிருந்து வெளியேறாமல் உள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்,'என்றனர்.வருவாய்துறை அதிகாரிகள் பேசுகையில்,'மாற்றிட திட்டத்தில் அரசு சார்பில் அய்யன்கொல்லி பகுதியில், முதுமலை மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்துக்கு, பட்டா வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாற்று திட்டத்தின் மூலம் திட்ட பயன்கள் அனைத்தும் பெற்றவர்கள், அப்பகுதியை விரைவாக காலி செய்து வெளியேற வேண்டும்,' என்றனர்.

தொடர்ந்து, திட்டத்தின் மூன்றாவது கட்ட, மாற்றிட திட்ட பட்டா வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.கூட்டத்தில், தாசில்தார்கள் தினேஷ்குமார் (கூடலுார்), மகேஸ்வரி (பந்தலுார்) முதுமலை வனச்சரகர் தயானந்தன், கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X