ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகள்தோறும் சென்று காசநோயாளிகளை கண்டறியும் பணி நிறைவு பெற்றது.
கொரோனா பரவலால் காசநோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட காசநோய் திட்ட அலுவலகத்தில் காசநோயாளிகள் வரத்து குறைந்தது. இதையடுத்து காசநோய் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் நகர் மற்றும் கிராமங்களில் வீடுகள் தோறும் சென்று பரிசோதனை செய்யும் பணி நடந்தது. மாவட்ட காசநோய் திட்ட துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், காச நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் வீடு வீடாக நேரில் சென்று நவீன கருவி மூலம் மருத்துவக் குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ஒரு காசநோயாளி குறைந்தது 15 பேருக்கு நோயை பரப்பும் அபாயம் உள்ளது. நாடு முழுவதும் அதிக உயிரிழப்பு ஏற்படுத்துவதுடன் காற்றில் பரவும் தொற்று நோயாக இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. காசநோய் உள்ளதை 2 மணி நேரத்தில் கண்டறியும் அதி நவீன சளி பரிசோதனை கருவிகளான 'சிபிநாட்' ட்ரு நாட்' கருவிகள் உள்ளன. ராமநாதபுரம் அருகே இந்திரா நகர், வன்னிவயல், ஆர்.காவனுார், கே.கே.நகர், மஞ்சனமாரியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் பரிசோதனை செய்யப் பட்டதுடன் இப்பணி நிறைவு பெற்றது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE