சென்னை:''தி.மு.க., தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன்,'' என, 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னையில், அவர் அளித்த பேட்டி:ரஜினி முடிவை வரவேற்கிறேன். அவரது உடல்நலம் முதன்மையானது. அரசியல் ரீதியாக, அவர் மீது கடுமையான சொற்களை பேசி உள்ளேன். அது, அவரையோ, அவரது குடும்பத்தினரையோ, ரசிகர்களையோ காயப்படுத்தி இருந்தால், வருந்துகிறேன்.இனி எப்போதும், அவர் எங்கள் புகழ்ச்சிக்குரியவர். ஆசிய கண்டம் முழுதும், அவரது புகழ் வெளிச்சம் பரவி கிடக்கிறது.
அரசியலில், உட்கட்சி பிரச்னையை சமாளிக்கவே சிரமமாக இருக்கும். அனைவரும் திட்டுவர். என்னை போன்ற ஒரு காட்டானாலேயே சமாளிக்க முடியவில்லை; அவரால் இதை தாங்க முடியாது. அதனால் தான் அவரை அரசியலுக்கு வர வேண்டாம் என்றேன்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ, அங்கு அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். தி.மு.க.,விற்கு மாற்று, நாம் தமிழர் தான்; அ.தி.மு.க., அல்ல.இவ்வாறு, சீமான் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE