ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகனங்களில் பம்பர் பொருத்தக்கூடாது. அவற்றை அகற்ற வேண்டும். இல்லையெனில் அபராதம் வசூலிக்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நான்கு சக்கர வாகனங்களில் விபத்து, சேதத்தை தவிர்ப்பதாக முன்பகுதியில் பம்பர்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் பகுதியில்வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது,மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ குழுவினர் வாகனங்களை ஆய்வு செய்து அரசு வாகனங்கள் உட்பட அனைத்து நான்கு சக்கர வாகனங்களில் இருந்த பம்பர்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். நான்கு சக்கர வாகனங்களில் முன்பகுதியில் பம்பர் பொருத்துவதால் விபத்து ஏற்படும்போது முன்பக்க அதிர்வை பம்பர் வாங்கிகொள்வதால் ஏர்பேக் வேலை செய்யாமல் உயிர்பலி ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க நான்குசக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனை மீறி வாகன சோதனையின் போது பம்பர் பொருத்தப் பட்டிருந்தால் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துதுறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE