அன்னுார் : பூத் கமிட்டி அமைக்கும் பணியை வேகப்படுத்த பா.ஜ., மாநில துணை தலைவர் அன்னுாரில் அறிவுறுத்தினார்.
சட்டசபைத் தேர்தலுக்கு, அவிநாசி தொகுதி பொறுப்பாளராக, பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் விநாயகமூர்த்தியும், அமைப்பாளராக, திருப்பூர் மாவட்ட பொதுச்செயலாளர் கதிர்வேலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன்தினம் அன்னுாரில் நடந்தது.கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர் விநாயகமூர்த்தி பேசுகையில், ''வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 55 ஓட்டுச் சாவடிகளிலும், தலா 20 பேர் கொண்ட பூத் கமிட்டி விரைவில் அமைக்க வேண்டும். கமிட்டி உறுப்பினர்கள் தினமும், 10 வீடுகளுக்கு செல்ல வேண்டும்.
''ஐந்து லட்ச ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீடு, வெறும் 12 ரூபாய்க்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு, 330 ரூபாய்க்கு இயற்கை மரணத்திற்கான இரண்டு லட்ச ரூபாய் காப்பீடு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, ஐந்து கோடி குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு ஆகிய சாதனைகளை சொல்ல வேண்டும்,'' என்றார்.
வடக்கு ஒன்றிய தலைவர் சத்யராஜ் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் திருமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், ஒன்றிய பொதுச் செயலாளர் விமல்ராஜ், சக்தி கேந்திர பொறுப்பாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE