தமிழ்நாடு

பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க... வழி சொல்லணும் அரசு!

Added : டிச 31, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால், பயிர் நாசமடையும் விவசாயிகள், பிரச்னைக்கு தீர்வு தெரியாமல் கண்ணீர் வடிக்கின்றனர். இதற்கு உரிய தீர்வு காண, தகுந்த நடவடிக்கையை, அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய வனப்பகுதிகளில் காட்டு பன்றிகள் நடமாட்டம் உள்ளன.அதிலும் குறிப்பாக மலைப்

மேட்டுப்பாளையம் : காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால், பயிர் நாசமடையும் விவசாயிகள், பிரச்னைக்கு தீர்வு தெரியாமல் கண்ணீர் வடிக்கின்றனர். இதற்கு உரிய தீர்வு காண, தகுந்த நடவடிக்கையை, அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய வனப்பகுதிகளில் காட்டு பன்றிகள் நடமாட்டம் உள்ளன.அதிலும் குறிப்பாக மலைப் பகுதியும், விவசாய நிலங்களும், அருகருகே இருக்கும் வெள்ளியங்காடு, தோலம்பாளையம் ஆகிய பகுதிகளில், பன்றிகளால் விவசாய பயிர்களும் சேதம் அதிகமாக உள்ளன.

அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் பயிர்களை, பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து சாப்பிடுவதால், ஒட்டுமொத்த விவசாயம் சேதமடைகிறது. இதனால் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

காரமடை அருகே முத்துக்கலூர் குறிஞ்சி உழவர் மன்ற செயலாளர் தேவராஜ் கூறியதாவது:வயலில் உழவு செய்து பயிர்களையும், விதைகளையும் நட்டவுடன், வயலில் கோரை புற்கள் வளரும். அதை சாப்பிட வரும் காட்டுப்பன்றிகள், நிலத்தை கிளறும் போது, விதைகளும், செடிகளும் சேதமடைகின்றன. இதனால், 50 சதவீதத்திற்கு மேல், விதைகள் முளைப்பதில்லை. பயிர்களும் சேதம் அடைகின்றன.

இனப்பெருக்கம் காரணமாக, பன்றிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து விட்டது. விவசாய நிலங்களின் அருகே உள்ள புதரில் தங்கி விடுகின்றன. இரவு நேரங்களில் இவை, கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களில் புகுந்து, தக்காளி, அரசாணி, வெள்ளரி, தர்பூசணி, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வாழை, மக்காச்சோளம் ஆகியவற்றை தின்று விடுகின்றன. மாட்டுத் தீவன பயிர்கள் வழியாக, காட்டுப்பன்றிகள் புகுந்து செல்கின்றன.

இந்த தீவனப் பயிர்களை மாடுகள் சரியாக சாப்பிடுவதில்லை. ஒவ்வொரு விவசாயிக்கும், காட்டுப்பன்றிகளால் பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும். விடியற்காலை பால் கறக்க விவசாயிகள் செல்லும்போது, நிலங்களில் இருந்து ஓடும் காட்டுப்பன்றிகள், விவசாயிகளை தாக்குகின்றன. இதில் பல விவசாயிகள் காயமடைந்துள்ளனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் இருந்து, காட்டுப்பன்றியை நீக்க வேண்டும்.இவ்வாறு தேவராஜ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X