ராமேஸ்வரம் :ராமேஸ்வரம் அருகே ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த பள்ளி மாணவி ராஜேஸ்வரி குடிசை வீட்டிற்குள் மெடல்களுடன் முடங்கி கிடக்கிறார்.இவரின் ஆசிய போட்டி கனவை அரசு நனவாக்க வேண்டும்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். மனைவி தேவி, மகள் ராஜேஸ்வரி16, இரு மகன்கள் உள்ளனர். குடிசை வீட்டில்வசிக்கும் ரமேஷ் குடும்பத்தினருக்கு மகள் ராஜேஸ்வரி, தேசிய அளவில் நடந்த இரு போட்டியில் பங்கேற்றுள்ளார்.இவரின் உடல் தகுதி, ஆர்வத்தினால் தற்போது திண்டுக்கல் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி, அங்கு விலாஸ் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார்.
சாதனை மாணவி
ராஜேஸ்வரி மாநில அளவில் நடந்த 100, 200 மீட்டர் ஓட்ட போட்டியில்தங்கம், வெண்கலம் பதக்கமும், 100, 400 மீட்டர் ரீலே போட்டியில் தங்கம்,வெள்ளி பதக்கமும்
வென்றார். இதுதவிர தமிழகத்தில் தனியார் நிறுவனம், சமூக அமைப்பு நடத்திய பல போட்டியிலும் சாதித்துள்ளார்.மாநிலம், மாவட்ட அளவில் நடந்த பல ஒட்ட போட்டியில் 35 மெடல்கள், 40க்கும் மேலான சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளார்.மாநிலத்திற்குள் முடங்காமல் 2019ல் மும்பை, ஆந்திராவில் நடந்த தேசிய ஓட்ட போட்டியிலும் அசத்தியுள்ளார். இவரது தொடர் சாதனைக்கு கொரோனா முட்டுக்கட்டை போட்டதால், 9 மாதமாக பயிற்சி, சத்து உணவு இன்றி வறுமையில் வாடும் குடும்பத்தினருடன் பொழுதை கழிக்கிறார்.
வேதனை
தேசிய, மாநில அளவில் சாதித்த மாணவி ராஜேஸ்வரிக்கு விடுதியில் இருந்த போது பாதாம், முந்திரி பருப்பு, பயிறு வகையை உட்கொண்டு பயிற்சிக்கு வலுவூட்டியது.ஆனால் 9 மாதமாக உடல் பயிற்சி, அதற்கு ஏற்ற உணவு ஏதும் இன்றி மூளையில் வளர்ந்த கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்த தாய், வீடுகளில் பழுதான எலக்ட்ரிக்கல் பொருள்களை சரி செய்யும் தந்தைக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நாட்களை கடத்தும் மாணவிக்கு, மூன்று வேளைக்கு உணவு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் காத்திருக்கும் அவலம் உள்ளது.
மாணவி ராஜேஸ்வரி கூறுகையில், சிறு வயதிலேயே பி.டி. உஷா போல் ஓட்ட போட்டியில் சாதிக்க வேண்டும் என ஆர்வமும் ஏற்பட்டது. என் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பயிற்சியால் மாவட்ட, மாநில அளவில் சாதித்து இருமுறை தேசிய போட்டியில் பங்கேற்றேன்.தொடர்ந்து பயிற்சி பெற்றால் தேசிய போட்டியில் வென்று, ஆசிய போட்டியில் சாதிப்பேன் என நம்பிக்கை உள்ளது. கடந்த 9 மாதமாக பயிற்சி வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில், குடும்பத்தில் வறுமை, வீட்டை காலி செய்ய வேண்டிய நிர்பந்ததால் பெரும் வேதனையாக உள்ளது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE