பொது செய்தி

தமிழ்நாடு

சாலைப்பணி துவக்கம்; ஊர் மக்கள் உற்சாகம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
அன்னுார் : பல ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதால், கணேசபுரம் மக்கள் மகிழ்ச்ச்சியடைந்துள்ளனர்.காட்டம்பட்டி ஊராட்சி, கணேசபுரத்தில், கால்நடை மருந்தகம் மற்றும் அம்மா பூங்கா உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்து காளிபாளையம் முதன்மை சாலைக்கு பாதை அமைக்கப்படாததால், மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பல ஆண்டுகளாக இதுகுறித்து கோரிக்கை வைத்து

அன்னுார் : பல ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதால், கணேசபுரம் மக்கள் மகிழ்ச்ச்சியடைந்துள்ளனர்.

காட்டம்பட்டி ஊராட்சி, கணேசபுரத்தில், கால்நடை மருந்தகம் மற்றும் அம்மா பூங்கா உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்து காளிபாளையம் முதன்மை சாலைக்கு பாதை அமைக்கப்படாததால், மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பல ஆண்டுகளாக இதுகுறித்து கோரிக்கை வைத்து வந்தனர்.இந்நிலையில், ஒன்றிய பொது நிதியில், 156 மீட்டருக்கு, கான்கிரீட் ரோடு போட ஏழு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதன் பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் வரவேற்றார். ஊராட்சி தலைவர் காயத்ரி, துணைத் தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பிரமணியம் பணியை துவக்கி வைத்தார்.தி.மு.க., ஐடி அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரண்குமார், ஒப்பந்ததாரர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X