பெ.நா.பாளையம் : இடிகரை பேரூராட்சியில் சுகாதார மேற்பார்வையாளரை கண்டித்து, துாய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக, 450 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், இடிகரை பேரூராட்சியில், சுகாதார மேற்பார்வையாளர் குறைவான கூலி தருவதாக புகார் எழுந்தது. இது குறித்து கேள்வி எழுப்பிய தூய்மை பணியாளர்களை, 'வேலைக்கு வர வேண்டாம்' என, சுகாதார மேற்பார்வையாளர் கூறினார்.இதை கண்டித்து, இடிகரை பேரூராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களும், நேற்றுமுன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் விஜயகுமார், தூய்மை பணியாளர்களை அழைத்து பேசினார். 'மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி தினக்கூலியாக, 450 ரூபாய் வழங்கப்படும்' என, உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE