தேனி:9 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கம்பம் போக்குவரத்து சிறப்பு எஸ்.ஐ., பாபா சிக்கந்தர் 54, என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குமுளி லோயர்கேம்ப் கிருஷ்ணன் கோயில் தெருவில் குடும்பத்துடன் வசித்த சிறப்பு எஸ்.ஐ., வீரபாண்டி போலீஸ் குடியிருப்புக்கு மாறினார். 2018 ஜன. 8 ல் அங்கு 38 வயதான நக்சல் பிரிவில் பணிபுரிந்த போலீஸ்காரரின் 9 வயது மகளை பாலியல் துன்புறுத்தினார்.'போக்சோ', வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரையில் 2018 பிப்., 6ல் , கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பளித்த நீதிபதி வெங்கடேசன், சிறப்பு எஸ்.ஐ., பாபா சிக்கந்தருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜராஜேஸ்வரி ஆஜரானார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE