பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா: மதுரை டிஸ்சார்ஜ் 20 ஆயிரத்தை நெருங்குகிறது

Added : டிச 31, 2020
Share
Advertisement
மதுரை:மதுரை மாவட்டத்தில் நேற்று 31 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 19,890 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 22 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 20,515 ஆகும். இதுவரை 452 பேர் இறந்துள்ளனர். தற்போது 177 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல்லில் நேற்று 18 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்தது. கொரோனாவால் நேற்று

மதுரை:மதுரை மாவட்டத்தில் நேற்று 31 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை 19,890 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 22 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 20,515 ஆகும். இதுவரை 452 பேர் இறந்துள்ளனர். தற்போது 177 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் நேற்று 18 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்தது. கொரோனாவால் நேற்று மட்டும் 20 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 10,926 ஆக அதிகரித்தது. தற்போது 153 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் நேற்று 15 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 16,614 பேர் குணம் அடைந்து உள்ளனர். புதிதாக 9 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16,889 ஆக உயர்ந்தது. நேற்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தும்மலபட்டி 52 வயது ஆண் இறந்தார். மொத்த பலி 323

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 2 பேர் மீண்ட நிலையில் புதிதாக 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 6318 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் 6158 பேர் குணமடைந்துள்ளனர். 28 பேர் சிகிச்சையில் உள்ளனர். 132 பேர் பலியாகியுள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 4 பேர் குணமடைந்தனர். 9 பேருக்கு கொரோனா கண்டறியப் பட்டது. மொத்தம் 6532 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 6337 பேர் குணமடைந்துள்ளனர். 69 பேர் சிகிச்சையில் உள்ளனர். 126 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 4 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 12 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை பாதிப்புக்குள்ளான 16,329 பேரில் 16,005 பேர் குணமடைந்துள்ளனர். 96 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் நேற்று 8 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 14941 பேர் குணமாகியுள்ளனர். புதிதாக 20 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 15282 ஆனது. தற்போது 130 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 211 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி

தென்காசியில் நேற்று 3 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 8052 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 8261 ஆனது. தற்போது 51 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 158 பேர் பலியாகியுள்ளனர்.

துாத்துக்குடி

துாத்துக்குடியில் நேற்று 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்தம் 15840 பேர் குணம் அடைந்து உள்ளனர். நேற்று 13 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16061 ஆனது. தற்போது 80 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 141 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X